பவுன்ச கரெக்ட்டா புடிச்சுட்டா நாள் ஃபுல்லா ஆடுவானுங்க!! அசால்ட்டா இல்லாம அலார்ட்டா இருங்க.. இந்திய பவுலர்களுக்கு நெஹ்ரா எச்சரிக்கை

By karthikeyan VFirst Published Nov 17, 2018, 4:50 PM IST
Highlights

ஆஸ்திரேலிய அணியில் ஸ்மித் மற்றும் வார்னர் இல்லாததோடு, இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு யூனிட் முன்னெப்போதையும் விட வலுவாக இருப்பது கூடுதல் பலம். புவனேஷ்வர் குமார், பும்ரா, இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், ஷமி என வலுவான பவுலிங் யூனிட்டை கொண்டுள்ளது இந்திய அணி.
 

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஐசிசி தரவரிசை பட்டியலில் நம்பர் 1 அணியாக இருந்தும், தொடர்ச்சியாக வெளிநாடுகளில் இந்திய அணி தோல்வியை சந்தித்துவருகிறது. தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் டெஸ்ட் தொடர்களை இழந்துள்ளது. எனவே ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை வெல்லும் முனைப்பில் உள்ளது இந்திய அணி. 

ஆஸ்திரேலிய அணியில் ஸ்மித் மற்றும் வார்னர் இல்லாததோடு, இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு யூனிட் முன்னெப்போதையும் விட வலுவாக இருப்பது கூடுதல் பலம். புவனேஷ்வர் குமார், பும்ரா, இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், ஷமி என வலுவான பவுலிங் யூனிட்டை கொண்டுள்ளது இந்திய அணி.

இந்நிலையில், ஆஸ்திரேலிய தொடர் குறித்து இந்திய வேகப்பந்து வீச்சாளர்களுக்கு முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ரா அறிவுரை கூறியுள்ளார். ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆடிய அனுபவம் கொண்ட நெஹ்ராவின் ஆலோசனைகள் இந்திய பவுலர்களுக்கு கண்டிப்பாக பயனுள்ளதாக அமையும். 

ஆஸ்திரேலிய தொடர் குறித்து பேசிய நெஹ்ரா, ஆஸ்திரேலிய அணி மறுகட்டமைப்பில் இருக்கும் இந்த தருணம் இந்தியாவிற்கு மிகப்பெரிய வெற்றி வாய்ப்பாகும். அவர்களை வீழ்த்தும் திறன் வாய்ந்த பவுலிங் யூனிட் நம்மிடம் உள்ளது. ஆஸ்திரேலிய ஆடுகளங்கள் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும். பிட்ச்சில் கூடுதல் பவுன்ஸ் இருக்கும், ஆனால் ஸ்விங் இருக்காது. கூகபரா பந்தின் தையல் வலுவிழக்கும் வரை ஸ்விங் இருக்கும். பிறகு ஸ்விங் இருக்காது. இங்கிலாந்தை போல் எப்போதுமே ஸ்விங் ஆகாது. பந்து அதிகமாக பவுன்ஸ் ஆகும். அந்த பவுன்ஸை ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் சரியாக பிடித்துவிட்டால் நாள் முழுதும் அடித்துக்கொண்டேயிருப்பார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

இந்திய பவுலர்களை பொறுத்தமட்டில் அடிலெய்டில் புவனேஷ்வர் குமார் தொடங்கமாட்டார் என்றே நினைக்கிறேன். பும்ரா, உமேஷ், ஷமி ஆகிய மூவரும் நன்றாக வீச வாய்ப்பிருப்பதாக கருதுகிறேன். உமேஷ் யாதவ் நம்ப முடியாத பல திறமைகளை கொண்டவர். உடற்தகுதியிலும் உமேஷ் சிறந்து விளங்குகிறார். அவர் இந்தியாவின் வறண்ட ஆடுகளங்களிலேயே அபாரமாக வீசினார். அதனால் ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் சிறப்பாக வீசுவார் என்று நம்புகிறேன். அதேபோல் ஷமியும் சிறப்பாக வீசுவார் என்ற நம்பிக்கை உள்ளது என்று நெஹ்ரா தெரிவித்துள்ளார். 

click me!