அனுபவத்துல சொல்றேன்.. கோலிகிட்ட மூடிகிட்டு இருங்க.. இல்லைனா ஆப்பு உங்களுக்குத்தான்!! ஆஸ்திரேலியாவை எச்சரிக்கும் தென்னாப்பிரிக்க கேப்டன்

By karthikeyan VFirst Published Nov 17, 2018, 2:20 PM IST
Highlights

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான தொடர் தொடங்க உள்ள நிலையில், இந்த முறை எந்தமாதிரியான சுவாரஸ்யங்கள் நடக்கப்போகின்றன என்பதை அறிய ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். 

சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரரான விராட் கோலி, ஆக்ரோஷமான வீரர். இளமைக் காலத்தில் மிகவும் ஆக்ரோஷமாக இருந்தார். எதிரணி வீரர்கள், ரசிகர்கள், ஊடகங்களின் விமர்சனங்களுக்கு அதிரடியாக பதிலடி கொடுப்பார். தன்னை வம்பிழுக்கும் எதிரணிக்கு பேட்டிங்கில் பதிலடி கொடுத்து கதறவிடுவார். இளமைக்காலத்தில் மிகவும் ஆக்ரோஷமாக இருந்த விராட் கோலி, இந்திய அணியின் கேப்டனான பிறகு பொறுப்பு அதிகரித்துவிட்டதால் வெற்றி ஒன்றையே இலக்காக கொண்டுள்ள கோலி, ஆக்ரோஷத்தை குறைத்துள்ளார். எனினும் யார் சீண்டினாலும் பதிலடி கொடுப்பது உறுதி. 

எதிரணி வீரர்களை வம்புக்கு இழுத்து சீண்டுவதில், ஆஸ்திரேலிய வீரர்கள் தான் நம்பர் 1. அந்த அணியின் வீரர்கள் மட்டுமல்லாது ஊடகங்கள், ரசிகர்கள் என அனைத்து தரப்புமே அந்த அணியுடன் மோதும் எதிரணியின் முக்கியமான வீரரை சீண்டும். இந்தியாவுடனான போட்டி என்றால், விராட் கோலி தான் அவர்களின் இலக்கு.

அந்த வகையில் இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான தொடர் தொடங்க உள்ள நிலையில், இந்த முறை எந்தமாதிரியான சுவாரஸ்யங்கள் நடக்கப்போகின்றன என்பதை அறிய ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். பொதுவாக கோலியை சீண்டுவது எதிரணிக்கு ஆபத்தாக முடியும். கோலியை சீண்ட சீண்ட, அதற்கு எல்லாம் சேர்த்து வைத்து பேட்டிங்கில் பதிலடி கொடுக்கக்கூடியவர் கோலி. அதனால் அவரை சீண்டுவது எதிரணிக்கு நல்லதல்ல.

கோலியை ஆஸ்திரேலிய ரசிகர்கள் கூட, கடந்த சுற்றுப்பயணங்களில் வம்பு இழுத்தனர். எனவே அதுபோன்ற நடவடிக்கைகளில் இனிமேல் ஈடுபட வேண்டாம் என்றும் அப்போது இருந்த கோலி வேறு; இப்போதிருக்கும் கோலி வேறு என்றும் அதனால் கோலியை வம்பிழுத்தால் அவர் ரன்களை குவிப்பார், அது ஆஸ்திரேலிய அணிக்கு பாதிப்பாக அமையும் என்பதால் கோலியை சீண்ட வேண்டாம் என்று கில்கிறிஸ்ட் ஏற்கனவே தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், கோலியை ஆஸ்திரேலிய அணி எவ்வாறு கையாள வேண்டும் என்று தென்னாப்பிரிக்க கேப்டன் டுபிளெசிஸ், ஒவ்வொரு அணியிலுமே விராட் கோலி போன்ற சண்டக்கோழி இருப்பார்கள். அவர்களிடம் வம்பு இழுப்பது அவர்களை உத்வேகப்படுத்தும் விதத்தில் அமையும். அதனால் தென்னாப்பிரிக்காவில் இந்திய அணி ஆடியபோது விராட் கோலியுடன் மோதல் போக்கை கையாளவில்லை. அவருக்கு மௌன சிகிச்சை அளித்தோம். அப்படியும் அவர் ஒரு சதம் அடித்தார். ஒவ்வொரு அணியுமே இதுபோன்ற வீரர்களுக்கு எதிராக உத்திகளை வகுப்பார்கள். ஆனால் எங்களை பொறுத்தவரை விராட் கோலிக்கு மௌன சிகிச்சை தான் சிறந்தது. ஆஸ்திரேலிய அணியும் அதையே கையாளலாம் என டுபிளெசிஸ் அறிவுறுத்தியுள்ளார். 
 

click me!