கடந்த 2022 ஆம் ஆண்டுக்கான சிறந்த கால்பந்து வீரராக லியோனல் மெஸ்ஸி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு நடந்த பிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் அர்ஜெண்டினா அணி உலகக் கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர் லியோனல் மெஸ்ஸி. கடந்த 1978 மற்றும் 1986 ஆண்டுகளில் அர்ஜெண்டினா உலகக்கோப்பையை கைப்பற்றியிருந்தது. கடந்த ஆண்டு 3ஆவது முறையாக உலகக் கோப்பையை கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு கால்பந்தில் சிறந்து விளங்கிய வீரர், வீராங்கனைகளுக்கான வாக்கெடுப்பை சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு நடத்தி சிறந்த வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்துள்ளது. இந்த வாக்கெடுப்பில் பிஃபா அமைப்பின் 211 உறுப்பு நாடுகள், பத்திரிக்கையாளர்கள், கேப்டன்கள், தேசிய அணியின் பயிற்சியாளர்கள் மற்றும் ரசிகர்கள் என்று அனைவரும் ஆன்லைன் வாயிலாக வாக்களித்தனர்.
30 ஆண்டுகளுக்குப் பிறகு வரலாற்றில் மறக்க முடியாத சாதனை - டெஸ்டில் 1 ரன் வெற்றி பெற்ற நியூசிலாந்து!
இதில் பிரான்சின் எம்பாப்பே மற்றும் கரின் பென்சிமா ஆகியோரை இறுதிச் சுற்றில் தோற்கடித்து லியோனல் மெஸ்ஸி சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலமாக 7ஆவது முறையாக சிறந்த வீரருக்கான பிஃபா விருதை லியோனல் மெஸ்ஸி பெற்றுள்ளார். பாரிஸில் நடந்த இந்த விருது வழங்கும் விழாவில் மறைந்த கால்பந்து வீரர் பீலேவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. சிறந்த வீராங்கனைக்கான விருதை ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த அலெக்சியா புட்டல்லாஸ் பெற்றுள்ளார்.
இன்னும் ஒன்னே ஒன்னு தான் பாக்கி: சாதனை படைக்க காத்திருக்கும் ரவீந்திர ஜடேஜா!
இதே போன்று சிறந்த பயிற்சியாளருக்கான விருதை லயோனல் ஸ்கோனி வென்றுள்ளார். சிறந்த மகளிர் பயிற்சியாளர் சரினா வீக்மேன், சிறந்த கோல்கீப்பர் எமிலியானோ மார்டினெஸ் மற்றும் சிறந்த மகளிர் கோல்கீப்பர் மேரி ஏர்ப்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
ஷர்துல் தாக்கூர் திருமண நிகழ்ச்சியில் மனைவியுடன் கலந்து கொண்ட ரோகித் சர்மா!