
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதிச்சுற்றில் அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்லோன் ஸ்டீபன்ஸ், மற்றும் மேடிசன் கீஸ் மோதுகின்றனர். இதில், யார் வென்றாலும் புகழ் என்னமோ அமெரிக்காவுக்குதான்.
ஆண்டின் இறுதி கிராண்ட்ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் உலகின் 9-ஆம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸும், சகநாட்டவரான ஸ்லோன் ஸ்டீபன்ஸும் மோதினர்.
அமெரிக்க ஓபனில் இருமுறை சாம்பியன் வென்ற வீனஸ் வில்லியம்ஸ் இந்த ஆட்டத்தின் முடிவில் ஸ்லோன் ஸ்டீபன்ஸிடம் 6-1, 0-6, 7-5 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார்.
மற்றொரு அரையிறுதியில் போட்டித் தரவரிசையில் 20-வது இடத்தில் இருந்த அமெரிக்காவின் கோகோ வான்டெவெக்கும், சகநாட்டவரான மேடிசன் கீஸும் மோதினர்.
இதில், 6-1, 6-2 என்ற நேர் செட் கணக்கில் கோகோ வான்டெவெக்கை வீழ்த்தினார் மேடிசன் கீஸ்.
இதனிடையே, ஸ்லோன் ஸ்டீபன்ஸ் மற்றும் மேடிசன் கீஸ் ஆகிய இருவரும், கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் இறுதிச்சுற்குக்கு முன்னேறுவது இதுவே முதல் முறை. அத்துடன் அவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள்.
இவர்கள் நேருக்கு நேர் மோதிக் கொள்வது இது 2-வது முறையாகும். முன்னதாக, 2015-ஆம் ஆண்டு மியாமி மாஸ்டர்ஸ் போட்டியின் 2-வது சுற்றில் இருவரும் மோதிக் கொண்டனர். அதில் மேடிசனை வீழ்த்தியிருந்தார் ஸ்டீபன்ஸ்.
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் இரு அமெரிக்கர்கள் மோதுவது இரண்டாவது முறையாகும். 2002-ல் இதுபோன்று நடந்தது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.