இந்தியாவிடம் தொடங்கி இந்தியாவிடமே முடிந்த குக்கின் கிரிக்கெட் வாழ்க்கை!! ஓய்வு அறிவித்தார் குக்

Published : Sep 03, 2018, 06:12 PM ISTUpdated : Sep 09, 2018, 07:42 PM IST
இந்தியாவிடம் தொடங்கி இந்தியாவிடமே முடிந்த குக்கின் கிரிக்கெட் வாழ்க்கை!! ஓய்வு அறிவித்தார் குக்

சுருக்கம்

இங்கிலாந்து அணியின் அனுபவ டெஸ்ட் வீரரும் முன்னாள் கேப்டனுமான அலெஸ்டர் குக், இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.   

இங்கிலாந்து அணியின் அனுபவ டெஸ்ட் வீரரும் முன்னாள் கேப்டனுமான அலெஸ்டர் குக், இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 

33 வயதான அலெஸ்டர் குக், கடந்த 2006ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணியில் அறிமுகமானார். டெஸ்ட், ஒருநாள் போட்டிகள் என இரண்டிலுமே சிறந்த வீரராக திகழ்ந்த குக், கடந்த 2014ம் ஆண்டு ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். 

இங்கிலாந்து அணிக்காக 160 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 12,254 ரன்களை குவித்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியலில், சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங், ஜாக் காலிஸ், ராகுல் டிராவிட், குமார் சங்ககரா ஆகியோருக்கு அடுத்தபடியாக 6வது இடத்தில் உள்ளார் குக்.

59 டெஸ்ட் போட்டிகளுக்கு இங்கிலாந்து அணியின் கேப்டனாக செயல்பட்டுள்ளார் குக். 2016ம் ஆண்டு இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்ததுடன் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகினார் குக். அதன்பிறகு இங்கிலாந்து அணியில் தொடர்ந்து வீரராக ஆடிவந்தார் குக். 

இந்தியாவிற்கு எதிராக நடந்துவரும் நடப்பு தொடரில் குக் சரியாக ஆடவில்லை. இதில் மட்டுமல்ல; கடந்த 6 மாதங்களாகவே குக் சரியாக ஆடவில்லை. அதனால் குக்கின் மீது விமர்சனங்கள் எழுந்தன. இந்தியாவிற்கு எதிரான நடப்பு தொடரில் 4 போட்டிகளிலும் சேர்த்தே 109 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.  முதல் போட்டியில் 13 ரன்களும் இரண்டாவது போட்டியில் 21 ரன்களும் மட்டுமே எடுத்தார். மூன்றாவது 46 ரன்கள் மற்றும் நான்காவது டெஸ்டில் 29 ரன்கள் என மொத்தமாகவே 109 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.  

தொடர்ந்து ஃபார்மில்லாமல் தவித்துவரும் குக், கடந்த சில மாதங்களாக சரியாக ஆடாததை காரணம் காட்டி, சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்துள்ளார். இந்தியாவிற்கு எதிரான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார். 

இந்தியாவிற்கு எதிராக அறிமுகமாகி, இந்தியாவிற்கு எதிரான தொடருடன் கேப்டன் பதவியை ராஜினாமா செய்த குக், இந்தியாவிற்கு எதிரான தொடருடனேயே ஓய்வும் பெற உள்ளார். 
 

PREV
click me!

Recommended Stories

2nd T20: இலங்கையை மீண்டும் ஊதித்தள்ளிய இந்தியா! ஷெபாலி வர்மா 'சரவெடி' அரைசதம்!
பெங்களூரு சின்னசாமியில் விராட் கோலி ஆட்டம்.. ஆனால் ரசிகர்கள் பார்க்க முடியாது.. ஏன் தெரியுமா?