அவங்கலாம் ஆளுங்களா..? அந்த 3 பேருக்கு பதிலா இவங்கள எடுத்துருக்கலாம்!! தெறிக்கவிடும் முன்னாள் ஸ்பீடு பவுலர்

By karthikeyan VFirst Published Sep 22, 2018, 3:47 PM IST
Highlights

ஆசிய கோப்பை தொடரில் காயம் காரணமாக விலகிய ஹர்திக் பாண்டியா, அக்ஸர் படேல் மற்றும் ஷர்துல் தாகூர் ஆகிய மூவருக்கு பதிலாக அணியில் சேர்க்கப்பட்டுள்ள மூன்று வீரர்கள் தேர்வு தவறானது முன்னாள் வீரர் அஜித் அகார்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
 

ஆசிய கோப்பை தொடரில் காயம் காரணமாக விலகிய ஹர்திக் பாண்டியா, அக்ஸர் படேல் மற்றும் ஷர்துல் தாகூர் ஆகிய மூவருக்கு பதிலாக அணியில் சேர்க்கப்பட்டுள்ள மூன்று வீரர்கள் தேர்வு தவறானது முன்னாள் வீரர் அஜித் அகார்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

14வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்துவருகிறது. இந்த தொடரில் இதுவரை இந்திய அணி சிறப்பாகவே ஆடிவருகிறது. லீக் சுற்றில் ஹாங்காங் மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரண்டு அணிகளையும் வீழ்த்திய இந்திய அணி, சூப்பர் 4 சுற்றின் முதல் போட்டியில் வங்கதேச அணியை வீழ்த்தியது. 

இந்த தொடரில் ஹாங்காங் அணிக்கு எதிரான போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாகூர் காயமடைந்தார். பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஹர்திக் பாண்டியா காயமடைந்தார். ஸ்பின் பவுலர் அக்ஸர் படேலும் காயமடைந்தார். அதனால் இவர்கள் மூவரும் ஆசிய கோப்பை தொடரிலிருந்து நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக ஜடேஜா, தீபக் சாஹர் மற்றும் சித்தார்த் கவுல் ஆகிய மூவரும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் ஜடேஜாவிற்கு வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் ஆடுவதற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஓராண்டுக்கு பிறகு மீண்டும் ஒருநாள் அணியில் இடம்பிடித்த ஜடேஜா, கிடைத்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக்கொண்டார். 4 விக்கெட்டுகளை வீழ்த்தி வங்கதேசத்தை 173 ரன்களுக்கே சுருட்டுவதற்கு முக்கிய காரணமாக திகழ்ந்தார். ஓராண்டுக்கு பிறகு மீண்டும் அணியில் இடம்பிடித்து தனது திறமையை நிரூபித்தார். 

எனினும் இவர்கள் மூவரையும் தேர்வு செய்ததை அஜித் அகார்கர் விமர்சித்துள்ளார். ஹர்திக் பாண்டியாவிற்கு பதிலாக ஜடேஜாவை சேர்க்காமல் குருணல் பாண்டியாவை சேர்த்திருக்க வேண்டும் எனவும் அவர்தான் துபாய் சூழலுக்கு சரியான தேர்வாக இருந்திருப்பார் எனவும் அகார்கர் தெரிவித்துள்ளார். மேலும் குருணல் பாண்டியாவை தேர்வு செய்து அவருக்கு வாய்ப்பு கொடுத்திருக்க இதுதான் சரியான தருணம் எனவும் அகார்கர் தெரிவித்துள்ளார். 

அதேபோல உமேஷ் யாதவ் அணியில் சேர்க்கப்படாததையும் அகார்கர் விமர்சித்துள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கு பிறகு உமேஷ் யாதவ் அணியில் சேர்க்கப்படவேயில்லை. அவர் எங்கு இருக்கிறார் என்றே தெரியவில்லை. சித்தார்த் கவுல் மற்றும் தீபக் சாஹர் ஆகிய இருவருமே டி20 பவுலர்கள் தானே தவிர ஒருநாள் போட்டிக்கு சரியான வீரர்கள் அல்ல. அவர்களுக்கு பதிலாக உமேஷ் யாதவை சேர்த்திருக்க வேண்டும் என அகார்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
 

click me!