2019 ஐபிஎல் குறித்த முக்கிய தகவல்!! ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி

By karthikeyan VFirst Published Sep 22, 2018, 2:46 PM IST
Highlights

2019 ஐபிஎல் முழுவதுமாக வெளிநாட்டிற்கு மாற்றப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இது ஐபிஎல் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. 
 

2019 ஐபிஎல் முழுவதுமாக வெளிநாட்டிற்கு மாற்றப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இது ஐபிஎல் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. 

ஐபிஎல் தொடர் கடந்த 2008ம் ஆண்டு தொடங்கியது. இதுவரை 11 சீசன்கள் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. 12வது சீசன் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. 

இந்நிலையில், அடுத்த ஐபிஎல் சீசன் எங்கு நடத்தப்படும் என்பது ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பாக இருந்துவருகிறது. அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ளதால், வெளிநாட்டிற்கு மாற்றப்படுமோ என்ற ஐயம் ரசிகர்களிடம் இருந்துவருகிறது. 

ஐபிஎல் தொடங்கப்பட்ட பிறகு, இதுவரை இரண்டுமுறை மக்களவை தேர்தல் நடந்துள்ளது. அப்போதெல்லாம் போட்டிகள் வெளிநாட்டிற்கு மாற்றப்பட்டன. 2009ம் ஆண்டு மக்களவை தேர்தலின்போது ஐபிஎல் போட்டிகள் தென்னாப்பிரிக்காவிற்கும் 2014 மக்களவை தேர்தலின்போது ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீராத்திற்கும் மாற்றப்பட்டது. 

எனவே அடுத்த ஆண்டும் வெளிநாட்டிற்கு மாற்றப்பட உள்ளது. மக்களவை தேர்தல் நடைபெறும் சமயத்திலான குறிப்பிட்ட போட்டிகளை மட்டும் வெளிநாட்டிற்கு மாற்றிவிட்டு மற்ற போட்டிகளை இந்தியாவிலேயே நடத்துவதற்குத்தான் முதலில் பிசிசிஐ திட்டமிட்டது. ஆனால் அது வீரர்களுக்கும் அணி நிர்வாகத்திற்கும் கடும் சவாலாக இருக்கும் என்பதால் மொத்த ஐபிஎல் தொடரையும் வெளிநாட்டிற்கு மாற்ற திட்டமிட்டு வருவதாக பிசிசிஐ அதிகாரி கூறியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

அதுவும் தென்னாப்பிரிக்காவில் நடத்தப்படுவதற்கான வாய்ப்புதான் அதிகம். ஏனென்றால், மொத்த தொடரையும் வெளிநாட்டில் நடத்துவதென்றால், மொத்தம் 60 போட்டிகளையும் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருக்கும் 2 மைதானங்களில் நடத்துவது கடினம். எனவே தென்னாப்பிரிக்காவில் நடத்தப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

அடுத்த ஐபிஎல் சீசன் முழுவதும் வெளிநாட்டிற்கு மாற்ற இருப்பதாக வெளியாகியுள்ள தகவல், ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 
 

click me!