14 ஆண்டுகளுக்குப் பிறகு இறுதிச்சுற்றில் கால் பதித்தார் அமெரிக்காவின் வீனஸ்…

Asianet News Tamil  
Published : Jan 26, 2017, 01:43 PM ISTUpdated : Sep 19, 2018, 03:01 AM IST
14 ஆண்டுகளுக்குப் பிறகு இறுதிச்சுற்றில் கால் பதித்தார் அமெரிக்காவின் வீனஸ்…

சுருக்கம்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் இறுதிச்சுற்றில் கால் பதித்தார்.

இந்த ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.

இதில் இன்று நடைபெற்ற மகளிர் முதல் ஒற்றையர் அரையிறுதியில் அமெரிக்காவின் 36 வயது வீனஸ் வில்லியம்ஸ், சக நாட்டைச் சேர்ந்த கோகோ வாண்டெவெக்கை எதிர்கொண்டார்.

இந்தப் போட்டியில், வீனஸ் வில்லியம்ஸ் 6-7 (3) 6-2 6-3 என்ற செட் கணக்கில் கோகோ வான்டெவெக்கைத் தோற்கடித்து வெற்றி வாகைச் சூடினார்.

இதன் மூலம் 14 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியன் ஓபன் போட்டியில் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளார் வீனஸ் வில்லியம்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

Galle Test: 462 ரன்கள் குவித்த இந்தியா... சரசரவென சரிந்த இலங்கை டாப் ஆர்டர்..!
Yashasvi Jaiswal: வைபவ் வந்ததும் ஜெய்ஸ்வாலை கழட்டிவிடும் RR..? MI உடன் மெகா டிரேட் டீல்..?