கோலிலாம் ஒரு ஆளே கிடையாதுங்க.. தோனியை புகழ்ந்து தள்ளி கோலியை காலி செய்த முன்னாள் கேப்டன்

By karthikeyan VFirst Published Nov 24, 2018, 1:37 PM IST
Highlights

கோலியின் கள வியூகம், பவுலர்களை பயன்படுத்தும் முறை, வீரர்களை கையாளும் முறை, ஆடுகளம் குறித்த கணிப்பு ஆகியவை கடும் விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளன. 

விராட் கோலி சமகால கிரிக்கெட்டின் மிகச்சிறந்த வீரர் என்பதில் யாருக்கும் எந்த ஐயமும் கிடையாது. ஆனால் அவரது கேப்டன்சியின் மீது பல்வேறு விமர்சனங்கள் உள்ளன. அவரை ஒரு முழுமையான முதிர்ச்சியான கேப்டனாக முன்னாள் ஜாம்பவான்கள் மற்றும் கிரிக்கெட் விமர்சகர்கள் பார்க்கவில்லை. 

கோலியின் கள வியூகம், பவுலர்களை பயன்படுத்தும் முறை, வீரர்களை கையாளும் முறை, ஆடுகளம் குறித்த கணிப்பு ஆகியவை கடும் விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளன. இவற்றில் எல்லாம் கோலியின் கேப்டன்சியில் குறைபாடுகள் இருப்பதை பார்க்கமுடிகிறது. வீரர்களை எப்படி கையாள வேண்டும், அவர்களை எப்படி வழிநடத்தி அவர்களிடமிருந்து சிறந்த ஆட்டத்தை வெளிக்கொண்டு வர வேண்டும் என்பதில் ஒரு கேப்டனாக கோலி இன்னும் நிறைய தேற வேண்டியுள்ளது. 

இதுகுறித்த பல அறிவுரைகளை அவ்வப்போது கோலிக்கு முன்னாள் கேப்டன் கங்குலி வழங்கிவருகிறார். ஆனால் அவற்றுக்கெல்லாம் கோலி செவி மடுக்கிறாரா? தன்னை ஒரு கேப்டனாக வளர்த்துக்கொள்ள முயற்சிக்கிறாரா என்பது தெரியவில்லை. அவரது கேப்டன்சியின் மீதான விமர்சனங்கள் மட்டும் வளர்ந்துகொண்டே தான் வருகின்றன. 

இந்நிலையில், தற்போது கோலி சிறந்த வீரரே தவிர சிறந்த கேப்டன் கிடையாது என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அஃப்ரிடி அதிரடியாக தெரிவித்துள்ளார். ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த அஃப்ரிடி, எனக்கு மிகவும் பிடித்த மற்றும் நான் ஆதரிக்கும் ஒரு பேட்ஸ்மேன் விராட் கோலி தான். ஆனால் அவர் சிறந்த வீரரே தவிர சிறந்த கேப்டன் அல்ல. ஒரு கேப்டனாக அவர் இன்னும் நிறைய முன்னேற வேண்டியிருக்கிறது. கேப்டன்சி திறனை வளர்த்துக்கொள்ள நிறைய பணிகளை செய்ய வேண்டியுள்ளது. கேப்டன்சியை பொறுத்தவரை தோனிதான் பெஸ்ட் என்று அஃப்ரிடி அதிரடியாக தெரிவித்துள்ளார். 
 

click me!