கோலி, ரோஹித் மண்டையவே கழுவிட்டாரே!! கேட்ச்சை விட்டாலும் தோனி இல்லாத குறையை தீர்த்துட்டாரு தம்பி ரிஷப்

By karthikeyan VFirst Published Nov 24, 2018, 12:23 PM IST
Highlights

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் கேட்ச்சை விட்டதோடு அவ்வப்போது மற்ற போட்டிகளிலும் சில பந்துகளை விட்டுவிடுகிறார் ரிஷப் பண்ட். அதனால் பேட்டிங்கில் சிறப்பாக ஆடினாலும் விக்கெட் கீப்பிங்கில் தோனியின் இடத்தை பூர்த்தி செய்வாரா என்ற சந்தேகம் எழுந்த நிலையில், அந்த நம்பிக்கையை ஒற்றை செயலில் கொடுத்துவிட்டார். 
 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் கேட்ச்சை விட்டதோடு அவ்வப்போது மற்ற போட்டிகளிலும் சில பந்துகளை விட்டுவிடுகிறார் ரிஷப் பண்ட். அதனால் பேட்டிங்கில் சிறப்பாக ஆடினாலும் விக்கெட் கீப்பிங்கில் தோனியின் இடத்தை பூர்த்தி செய்வாரா என்ற சந்தேகம் எழுந்த நிலையில், அந்த நம்பிக்கையை ஒற்றை செயலில் கொடுத்துவிட்டார். 

தோனியின் இடத்தை ரிஷப் பண்ட்டை வைத்து பூர்த்தி செய்யும் எண்ணத்தில் உள்ளது இந்திய அணி. அடுத்த ஆண்டு நடக்கும் உலக கோப்பை வரைதான் அதிகபட்சம் தோனி ஆடுவார். அதன்பிறகு ஓய்வு பெற்றுவிடுவார். எனவே அவரது இடத்திற்கு இப்போதிலிருந்தே ஒரு வீரரை உருவாக்குவது அவசியம். 

அந்த வகையில் ரிஷப் பண்ட்டை தோனியின் இடத்திற்கு தயார் செய்துவருகிறது இந்திய அணி. ஆனால் பேட்டிங்கில் சோபித்தாலும், விக்கெட் கீப்பிங்கில் பெரியளவில் சோபிக்காமல் சொதப்பிவருகிறார் ரிஷப் பண்ட். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் அறிமுகமானபோதே அவரது விக்கெட் கீப்பிங் டெக்னிக் விமர்சனத்துக்குள்ளானது. 

அதற்கேற்றாற்போல அவரும் தொடர்ந்து விக்கெட் கீப்பிங்கில் சிறு சிறு தவறுகளை செய்வதோடு அவ்வப்போது கேட்ச்களையும் பேட்ஸ்மேன்கள் அடிக்க தவறும் பந்துகளையும் விட்டுவிடுகிறார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நேற்றைய இரண்டாவது டி20 போட்டியில் கூட புவனேஷ்வர் குமாரின் பவுலிங்கில் ஷார்ட்டுக்கு ஒரு கேட்ச்சை விட்டதோடு, ஓரிரு பந்துகளையும் பிடிக்காமல் விட்டு ரன் கொடுத்தார். 

அதனால் அவரது விக்கெட் கீப்பிங் திறன் மீது விமர்சனங்கள் வலுத்தாலும் கூட, தான் தோனியை இடத்தை பூர்த்தி செய்ய தகுதியான நபர்தான் என்பதை ஒற்றை செயலில் நிரூபித்து காட்டியுள்ளார். பொதுவாக ரிவியூ கேட்பதில் தோனி வல்லவர். பெரும்பாலும் அவரது கணிப்பு சரியாகவே இருக்கும். விக்கெட் கீப்பர் தோனியின் ஆலோசனையை பெற்றபிறகே கேப்டன் கோலியாக இருந்தாலும் ரோஹித்தாக இருந்தாலும் ரிவியூ கேட்பர். அந்தளவிற்கு தோனியின் மீது நம்பிக்கை. அந்த நம்பிக்கையை காக்கும் வகையில் தோனியும் சரியாகத்தான் வழிநடத்துவார். 

டி20 போட்டிகளில் தோனி இல்லாத நிலையில், அவரது இடத்தை எந்தளவிற்கு ரிஷப் பண்ட் பூர்த்தி செய்வார் என்று சந்தேகம் இருந்தது. ஆனால் தன்னால் தோனியின் இடத்தை நிரப்ப முடியும் என்பதை ரிவியூ கேட்கும் தெளிவின்மூலம் உணர்த்தியுள்ளார் ரிஷப். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் குல்தீப் யாதவ் வீசிய 12வது ஓவரின் இரண்டாவது பந்தை அலெக்ஸ் கேரி எதிர்கொண்டு ஆடினார். அந்த பந்து அவரது முழங்கைக்கு அருகே பட்டு அதை ரிஷப் கேட்ச் செய்தார். பேட்ஸ்மேனின் கையுறைக்கு மிகவும் அருகில் சென்றதால் பந்து கையுறையில்தான் பட்டது என நம்பிய குல்தீப், உறுதியாக இருந்தார். குல்தீப்பின் உறுதி மற்றும் பந்து கையுறைக்கு மிகவும் நெருக்கமாக சென்றதால், ரோஹித் சர்மா மற்றும் கோலி ஆகிய இருவரும் ரிவியூ கேட்பதற்காக ரிஷப்பின் கருத்தை கேட்டனர். பந்து கையுறையில் படவில்லை என்பதை உறுதியாக நம்பிய ரிஷப், ரிவியூ கேட்கவேண்டாம் என திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். 

அதனால் ரிவியூ கேட்கவில்லை. ரிஷப் தெளிவாக பார்த்து உறுதியாக கூறியதால் ஒரு ரிவியூ தப்பியது. அந்த ரிவியூவால் பெரியளவில் இந்திய அணிக்கு பயனோ பாதிப்போ இல்லையென்றாலும் ரிவியூ விஷயத்தில் தோனியை போலவே ரிஷப் உறுதியாக செயல்பட்டது கவனத்தை ஈர்த்துள்ளது. 
 

click me!