உலக கோப்பைக்கு தகுதி பெற்ற ஆப்கானிஸ்தான்!! அயர்லாந்தை வீழ்த்தி அபாரம்

First Published Mar 24, 2018, 12:41 PM IST
Highlights
afghanistan qualified for world cup


2019 உலக கோப்பைக்கு ஆப்கானிஸ்தான் அணி தகுதி பெற்றுள்ளது. 

அடுத்த ஆண்டு இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் கிரிக்கெட் உலக கோப்பை நடக்க இருக்கிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஐசிசி தரவரிசையில், முதல் 8 இடங்களை பிடித்த சர்வதேச கிரிக்கெட் அணிகள் நேரடியாக உலக கோப்பையில் விளையாட தகுதி பெற்றன.

அதன்படி, இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆகிய அணிகள் உலக கோப்பைக்கு தகுதியான அணிகளாகி விட்டன. மீதமுள்ள இரண்டு அணிகளை தேர்வு செய்வதற்காக உலக கோப்பை தகுதி போட்டிகள் நடந்துவருகின்றன.

இதில், ஏற்கனவே வெஸ்ட் இண்டீஸ் அணி தகுதி பெற்றுவிட்ட நிலையில், நேற்று அயர்லாந்தை வீழ்த்தியதன் மூலம் ஆப்கானிஸ்தான் அணியும் உலக கோப்பைக்கு தகுதிபெற்றுள்ளது. 

நேற்று நடந்த அயர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 210 என்ற இலக்கை எட்டி, 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றது. அந்த அணியின் கேப்டனும் சிறந்த ஸ்பின் பவுலருமான ரஷீத் கான், ஐசிசி பவுலிங் தர வரிசை பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார். 19 வயதே ஆன ரஷீத், அணியையும் சிறப்பாக வழிநடத்தி வருகிறார்.

சிறப்பாக செயல்பட்டு வரும் ஆப்கானிஸ்தான் அணி, உலக கோப்பைக்குள் மேலும் வலுவாகி, உலக கோப்பையில் பிரதான அணிகளுக்கு சவால் விடுத்தால் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை. 
 

click me!