வெளிநாட்டு கிராண்ட் மாஸ்டரை வீழ்த்திய 7 வயது அரியலூர் சிறுமி... பார்வையாளராக வந்து செய்த தரமான சம்பவம்.

By Ezhilarasan BabuFirst Published Aug 4, 2022, 3:48 PM IST
Highlights

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ஆடியன்ஸ் ஆக வந்து வெளிநாட்டு செஸ் கிராண்ட் மாஸ்டரை தமிழகத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமி வீழ்த்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ஆடியன்ஸ் ஆக வந்து வெளிநாட்டு செஸ் கிராண்ட் மாஸ்டரை தமிழகத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமி வீழ்த்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அச்சிறுமி அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஷர்வானிகா என்பது தெரியவந்துள்ளது.உலகளவில் புகழ்பெற்ற 44வது செஸ்  போட்டி மாமல்லபுரத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதில் பல்வேறு நாட்டு வீரர்கள்  கலந்து கொண்டுள்ளனர். இந்தியாவைச் சேர்ந்த 6 வீரர்களும் அடுத்தடுத்து வெற்றி பெற்றுள்ளனர். சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெறும்  போட்டியை காண ஏராளமான மக்கள் வந்த வண்ணம் உள்ளனர். போட்டியைக்காண அரியலூரைச் சேர்ந்த 7 வயது சிறுமி ஒலிம்பியாட் விளையாட்டு அரங்கிற்கு வந்து இருந்தார்.

இந்நிலையில் போட்டிகள் முடிந்த நிலையில்  போஸ்வானவை சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் டிங்க்வென் பார்வையாளர்களிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு பார்வையாளர்களுக்காக செஸ் போர்டுகள் வைக்கப்பட்டிருந்தது. சிலர் செஸ் போர்டில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த டிங்க்வென்  என்னுடன் யாராவது விளையாட வருகிறீர்களா?  என கேட்டார், அவரின் அந்த கேள்வி சவால் விடுவது போல இருந்தது, அப்போது அரியலூரை சேர்ந்த மாணவி ஷர்வானிகா நான் வருகிறேன் எனக் கூறினார். அப்போது அங்கிருந்தவர்கள் அச்சிறுமியின் தைரியத்தை பாராட்டி கைதட்டி வரவேற்றனர்.

டிங்க்வென்னும் வா மோதி பார்க்கலாம் என சிறுமியுடன் சேர்ந்து விளையாட ஆரம்பித்தார். வெளிநாட்டு கிராண்ட் மாஸ்டருடன் 7 வயது சிறுமி ஆடுவதை அங்கிருந்தவர்கள் ஆர்வமாகப் பார்த்தனர். அப்போது சிறுமியின் ஒவ்வொரு நகரத்திலும் டிங்க்வென்னை  திக்குமுக்காட வைத்தது. சிறுமியை அசால்டாக நினைத்து ஆடத் தொடங்கிய அவர் ஒருகட்டத்தில் சீரியஸ் ஆடினார், சிறுமியின் ஒவ்வொரு நகரத்திலும் பார்த்து வியப்படைந்த அவர் சிறுமி ஒவ்வொரு காயங்களையும் வெளியேற்ற ஆரம்பித்ததை கண்டி ஆடிப்போனார். ஒருகட்டத்தில் அவர் எவ்வளவோ முயற்சித்தும் அவரின் காய்கள்  ஷர்வானிகாவிடம் இருந்து தப்பவில்லை.

ஒரு கட்டத்தில் அடுத்தடுத்த காய்களை வெளியேற்றி போஸ்வானா நாட்டு கிராண்ட்மாஸ்டரை ஷர்வானிகா வீழ்த்தினார். அப்போது அங்கிருந்த பார்வையாளர்கள் பயங்கர சத்தத்துடன் கைதட்டி சிறுமியை ஆரவாரம் செய்து கொண்டாடினர். அப்போது பேசிய சிறுமி நான்கு வயது முதலிருந்தே செஸ் விளையாடி வருகிறேன், மாவட்ட மாநில அளவிலான போட்டிகளில் விளையாடி வருகிறேன், ஏழு வயதுக்குட்பட்டோருக்கான சாம்பியன் பட்டத்தை பெற்றுள்ளேன் என  தனது பராக்கிரமத்தை கூறினார். அதைக்கேட்ட அங்கிருந்தவர்கள் ஆச்சரியத்தில் வியந்து போயினர்.

செஸ் போட்டியில் அடுத்தடுத்து சாதித்துவரும் ஷர்வானிகா இலங்கையில் நடைபெற உள்ள ஆசிய அளவிலான சதுரங்கப் போட்டியில் விளையாட தேர்வாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பண வசதி இல்லை என்பதால் அரசின் உதவியை அவர் கோரியுள்ளார். இடையில் ஷர்வானிகாவின் வெற்றியை போஸ்வானா நாட்டு வீரர் டிங்க்வென் வெகுவாக பாராட்டினார். இச்சிறுமி எதிர்காலத்தில் பெரிய வீராங்கனையாக வருவார் என்றும் அவர் கூறினார். 
 

click me!