இந்தியா முதல் இன்னிங்ஸில் 417 ஓட்டங்கள்; ஆல் அவுட்…

Asianet News Tamil  
Published : Nov 29, 2016, 12:18 PM ISTUpdated : Sep 19, 2018, 02:16 AM IST
இந்தியா முதல் இன்னிங்ஸில் 417 ஓட்டங்கள்; ஆல் அவுட்…

சுருக்கம்

இங்கிலாந்துக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 138.2 ஓவர்களில் 417 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தது.

பின்வரிசை பேட்ஸ்மேன்களான அஸ்வின் 72, ஜடேஜா 90, ஜெயந்த் யாதவ் 55 ஓட்டங்கள் சேர்த்து இந்தியா வலுவான ஸ்கோரை எட்டுவதற்கு உதவினர்.

மொஹாலியில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 93.5 ஓவர்களில் 283 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தது. அந்த அணியில் பேர்ஸ்டோவ் 89 ஓட்டங்கள் குவித்தார்.

இந்தியத் தரப்பில் முகமது சமி 3 விக்கெட்டுகளையும், உமேஷ் யாதவ், ஜெயந்த் யாதவ், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி 2-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் 84 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 271 ஓட்டங்கள் எடுத்திருந்தது. அஸ்வின் 57, ஜடேஜா 31 ஓட்டங்கள் எடுத்து களத்தில் இருந்தனர்.

ஜடேஜா 90: 3-ஆவது நாளான திங்கள்கிழமை தொடர்ந்து ஆடிய இந்திய அணி 301 ஓட்டங்களை எட்டியபோது அஸ்வினின் விக்கெட்டை இழந்தது. 113 பந்துகளை எதிர்கொண்ட அவர் 11 பவுண்டரிகளுடன் 72 ஓட்டங்கள் சேர்த்து ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் பேர்ஸ்டோவிடம் கேட்ச் ஆனார். அஸ்வின்-ஜடேஜா ஜோடி 7-ஆவது விக்கெட்டுக்கு 97 ஓட்டங்கள் சேர்த்தது.

இதையடுத்து ஜெயந்த் யாதவ் களமிறங்க, மறுமுனையில் நிதானமாக ஆடிய ஜடேஜா 104 பந்துகளில் அரை சதத்தை எட்டினார். அவருக்குப் பக்கபலமாக ஜெயந்த் யாதவ் ஆட, மதிய உணவு இடைவேளையின்போது இந்தியா 114 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 354 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

உணவு இடைவேளைக்குப் பிறகு தொடர்ந்து சிறப்பாக ஆடிய ஜடேஜா சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரஷித் பந்துவீச்சில் சிக்ஸர் அடிக்க முயன்ற ஜடேஜா, கிறிஸ் வோக்ஸிடம் கேட்ச் ஆனார். இதனால் 10 ஓட்டங்களில் சதத்தை தவறவிட்டார்.

170 பந்துகளைச் சந்தித்த ஜடேஜா 1 சிக்ஸர், 10 பவுண்டரிகளுடன் 90 ஓட்டங்கள் எடுத்தார். ஜடேஜா-ஜெயந்த் ஜோடி 8-ஆவது விக்கெட்டுக்கு 80 ஓட்டங்கள் சேர்த்தது.

ஆட்டத்தின் இறுதியில், இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 138.2 ஓவர்களில் 417 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தது.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

ஆஷஸ் தொடர் 2025-26: ஆஸ்திரேலியாவின் 14 ஆண்டு கால சாதனையை முறியடித்த இங்கிலாந்து
சிம்பு விக்கெட்டை எடுத்தது நான்தான்! வைரலாகும் முதல்வர் ஸ்டாலின் ஸ்பின் பவுலிங் வீடியோ!