
மியாமி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் ஜோஹன்னா கோன்டா வாகைச் சூடியதன் மூலம் கடந்த 40 ஆண்டுகளில் பெரிய அளவிலான டென்னிஸ் போட்டிகளில் வென்ற முதல் பிரிட்டன் வீராங்கனை என்ற பெயரை கோன்டா பெற்றுள்ளார்.
அமெரிக்காவின் மியாமி நகரில் மியாமி மாஸ்டர்ஸ் டென்னிஸ் ப்
போட்டி நேற்று நடைப்பெற்றது. இதன் இறுதிச் சுற்றில் பிரிட்டனின் கோன்டா 6-4, 6-3 என்ற நேர் செட்களில் டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கியை வீழ்த்தினார்.
இந்த ஆட்டத்தின் தொடக்கம் முதலே அசத்தலாக ஆடினார் கோன்டா. முதல் செட்டின் முதல் ஆட்டத்திலேயே வோஸ்னியாக்கியின் சர்வீஸை முறியடித்து உச்சத்தில் இருந்தார். எனினும் 4-ஆவது ஆட்டத்தில் எதிர்பாராதவிதமாக கோன்டா தனது சர்வீஸை இழக்க, இருவரும் 2-2 என்ற கணக்கில் சமனானர்.
ஒன்பதாவது ஆட்டத்தில் வோஸ்னியாக்கியின் டபுள் பால்ட் சரியாகப் பயன்படுத்திக் கொண்ட கோன்டா, அவருடைய சர்வீஸை முறியடித்தார். இதன்மூலம் அவர் முதல் செட்டை 6-4 என்ற கணக்கில் கைப்பற்றினார்.
முதல் செட்டைப் போலவே, இரண்டாவது செட்டிலும் ஆரம்பக் கட்டத்தில் இருவரும் மாறிமாறி சர்வீஸை முறியடித்தாலும் 7-ஆவது ஆட்டத்தில் வோஸ்னியாக்கியின் சர்வீஸை முறியடித்து 4-3 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றார் கோன்டா.
அதனைத் தொடர்ந்து அபாரமாக ஆடிய கோன்டா, 9-ஆவது ஆட்டத்தில் வோஸ்னியாக்கியின் சர்வீஸை மீண்டும் முறியடித்து 2-ஆவது செட் 6-4 என்ற கணக்கில் அவர் வசமானது.
இந்த வெற்றியின் மூலம் கோன்டா சர்வதேச தரவரிசையில் 7-ஆவது இடத்துக்கு முன்னேறும் வாய்ப்பைப் பெற்றார்.
இந்த வெற்றியின் மூலம் கடந்த 40 ஆண்டுகளில் பெரிய அளவிலான டென்னிஸ் போட்டிகளில் வென்ற முதல் பிரிட்டன் வீராங்கனை என்ற பெயரை கோன்டா பெற்றுள்ளார்.
இதற்கு முன்னதாக 1977 விம்பிள்டன் போட்டியில் பிரிட்டனின் விர்ஜினியா வேட் பட்டம் வென்றிருந்தார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.