
சிந்துவுக்கு சாம்பியன் பட்டம்…..இந்திய ஓபன் பைனலில் கரோலினா மரினை வீழ்த்தினார்
புதுடெல்லியில் நடந்த இந்தியன் ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவு சாம்பியன் பட்டத்தை இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து முதல் முறையாகக் கைப்பற்றினார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த சீன ஓபனில் சாம்பியன் பட்டம் வென்ற நிலையில், இப்போது 2-வது பட்டத்தை வென்றுள்ளார் சிந்து.
இந்தியன் ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டி கடந்த ஒரு வாரமாக டெல்லியில் உள்ள ஸ்ரீபோர்ட் விளையாட்டு அரங்கில் நடந்து வந்தது. மகளிர ஒற்றையர் பிரிவில் நடந்த இறுதிச்சுற்றில், ஸ்பெயின் வீராங்கனை கரோலினாமரினை எதிர்கொண்டார் பி.வி. சிந்து.
ஏறக்குறைய போட்டி முழுவதும் சிந்துவின் ஆதிக்கமே இருந்தது. தொடக்கத்தில் இருந்தே மரினை தினறடிக்கும் வகையில் சிந்துவின் ஆட்டம் அமைந்திருந்தது. அதற்கு ஏற்றார்போல் ரசிகர்களின் ஆதரவும் சிந்துவுக்கு உத்வேகமாக அமைந்தது.
மிரினுக்கு எதிரான முதல் செட்டை 21-19 என்ற செட்களில் சிந்து கைப்பற்றினார். தொடர்ந்து 2-வது செட்டிலும் சிந்து தனது வலிமையான முன்கை ஆட்டம்,பிளேஸ்கள் ஆகியவற்றால் மரினை திக்குமுக்காட செய்தார். இதனால், 2-வது செட்டை 21-16 என்ற கணக்கில் சிந்து தனதாக்கினார். ஒட்டுமொத்தமாக 46 நிமிடங்களில் சிந்து ஆட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்தார்.
இதன் மூலம், இந்தியன் ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் சிந்து முதல் முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளார். இதற்கு முன் இந்தியாவின் சாய்னா நேவால், கிடாம்பி ஸ்ரீகாந்த், ஆகியோர் கடந்த 2015ம் ஆண்டு சாம்பியன் பட்டம் வென்று இருந்தனர். அவர்களுக்குபின் இப்போது சிந்து வென்றுள்ளார். வெற்றி பெற்ற சிந்துவுக்கு ரூ.2.10 கோடி பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது.
ஆடவர் பிரிவில் டென்மார்க் வீரர் விக்டர் ஆக்சில்சென் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். இறுதி ஆட்டத்தில், சீன தைப்பே வீரர் தியன் சென் சூவை 21-13, 21-10 என்றசெட்களில் விக்டர் தோற்கடித்தார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.