நீ டெஸ்ட் போட்டிக்குதான் லாயக்கு.. ஆஸ்திரேலிய அணியில் 2 மாற்றங்கள்!!

By karthikeyan VFirst Published Jan 18, 2019, 9:26 AM IST
Highlights

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான கடைசி ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. 
 

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான கடைசி ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. 

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான முதல் இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்றதால் தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. இந்நிலையில், கடைசி ஒருநாள் போட்டி மெல்போர்னில் நடந்துவருகிறது. 

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்ததால் ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. இந்த போட்டியில் இந்திய அணி 3 மாற்றங்களுடனும் ஆஸ்திரேலிய அணி 2 மாற்றங்களுடனும் களமிறங்கியுள்ளது. 

ராயுடுவுக்கு பதில் கேதர் ஜாதவ், குல்தீப்பிற்கு பதிலாக சாஹல் மற்றும் சிராஜிற்கு பதில் விஜய் சங்கர் ஆகிய மூன்று மாற்றங்கள் இந்திய அணியில் செய்யப்பட்டுள்ளன. 

ஆஸ்திரேலிய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் பெஹ்ரெண்டோர்ஃபிற்கு பதிலாக பில்லி ஸ்டேன்லேக்கும் ஸ்பின்னர் நாதன் லயனுக்கு பதிலாக ஆடம் ஸாம்பாவும் சேர்க்கப்பட்டுள்ளனர். டெஸ்ட் தொடரில் அருமையாக பந்து வீசி இந்திய அணிக்கு நெருக்கடி கொடுத்து விக்கெட்டுகளை வீழ்த்திய நாதன் லயனின் பந்துவீச்சு ஒருநாள் போட்டியில் எடுபடவில்லை. எனவே அவருக்கு பதிலாக ஆடம் ஸாம்பா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 

இந்திய அணி:

ரோஹித் சர்மா, தவான், கோலி(கேப்டன்), தோனி(விக்கெட் கீப்பர்), கேதர் ஜாதவ், தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர், ஜடேஜா, புவனேஷ்வர் குமார், ஷமி, சாஹல்.

ஆஸ்திரேலிய அணி:

அலெக்ஸ் கேரி(விக்கெட் கீப்பர்), ஆரோன் ஃபின்ச்(கேப்டன்), உஸ்மான் கவாஜா, ஷான் மார்ஷ், ஹேண்ட்ஸ்கம்ப், மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், ரிச்சர்ட்ஸன், ஸ்டேன்லேக், ஆடம் ஸாம்பா, பீட்டர் சிடில்.
 

click me!