
துபாய் ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் நடப்பு சாம்பியன் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர், 116-வது இடத்தில் இருக்கும் ரஷியாவின் ஈவ்ஜெனி டான்ஸ்காயிடம் தோல்வி அடைந்தது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
துபாயில் நடைபெற்று வரும் துபாய் ஓபன் டென்னிஸ் போட்டியில் நடப்பு ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனான ஃபெடரர் 6-3, 6-7 (7), 6-7 (5) என்ற நேர் செட்களில் சர்வதேச தரவரிசையில் 116-ஆவது இடத்தில் இருக்கும் ரஷியாவின் ஈவ்ஜெனி டான்ஸ்காயிடம் தோல்வி கண்டார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் செட்டை எளிதாக 6-3 என்ற கணக்கில் கைப்பற்றினார் ஃபெடரர்.
இதையடுத்து நடைபெற்ற 2-ஆவது சுற்றில் அபாரமாக ஆடிய டான்ஸ்காய், அதை டைபிரேக்கர் வரை கொண்டு சென்று 7-6 (7) என்ற கணக்கில் கைப்பற்றினார்.
பின்னர் நடைபெற்ற வெற்றியைத் தீர்மானிக்கும் 3-ஆவது செட்டும் டைபிரேக்கருக்கு சென்றது. அதில் ஒரு கட்டத்தில் ஃபெடரர் 5-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தார். அதனால் அவர் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் திடீரென சரிவிலிருந்து மீண்ட டான்ஸ்காய் தொடர்ச்சியாக 6 புள்ளிகளைப் பெற்று அந்த செட்டையும் 7-6 (5) என்ற கணக்கில் கைப்பற்றி வெற்றி கண்டார்.
சாம்பியன் பட்டம் வென்றவர் தோல்வி அடைந்தது அவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏர்படுத்தியுள்ளது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.