
ஐபிஎல் வீரருக்கு 14.5 கோடி..பார்வையற்றோர் கிரிக்கெட்அணிக்கு வெறும் 1௦ லட்சம்ரூபாய் தான்.....
இந்திய கிரிக்கட்டில் ஒருஅங்கமாக உள்ள ,பார்வையற்றோர் உலக கோப்பை கிரிகெட் போட்டியில், இந்திய அணி தொடரை வென்று உலக கோப்பையை கைப்பற்றியது மீடியாக்களில் பெரிதாக கவனிக்கக்படாமல் போன இந்த வெற்றி தற்போது தான், இந்த அணியினர் பிரதமர் மோடியை சந்தித்த பின், வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சாதரணமாகவே ஒரு தொடரையோ அல்லது ஒரூ போட்டியையோ வெல்வது என்பது சவாலாக இருக்கும் நிலையில், பார்வையற்றோர் செய்த இந்த சாதனை நிச்சயம் கொண்டாடப் படவேண்டியது மட்டுமல்லாமல் , அவர்களுக்கான ஊக்கத்தொகையும் ,பரிசுத் தொகையும் இந்திய அரசின் சார்பாக அதிகப் படுத்த வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் ஒட்டு மொத்த கோரிக்கையாக உள்ளது
தற்போது ஐபிஎல் ஏலம் நடைபெற்றுவரும் நிலையில், பல கோடிக்கு பல்வேறு நாடுகளை சேர்ந்த கிரிகெட் வீரர்களை ஏலம் எடுப்பது , வாடிக்கையாகி வருகிறது.
இதன் உச்சகட்டமாக இங்கிலாந்தை சேர்ந்த பென்ஸ் ஸ்ட்ரோக்ஸ் என்ற கிரிக்கெட் வீரர் புனே சூப்பர் ஜெயன்ஸ் அணிக்காக 14.5 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.
ஆனால் இந்திய பாரவையற்றோர் அணிக்காக விளையாடி உலக கோப்பையை வென்ற , நமது வீரர்களுக்கு 1௦ லட்சம் பரிசு தொகை என அறிவிக்கப்பட்டுள்ளது வேதனை அளிப்பதாக மூத்த விளையாட்டு வீரர்கள் தெரிவித்துள்ளனர் .
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.