இந்திய அணியின் அடுத்த கேப்டன் அவருதான் - யுவராஜ் சிங் அதிரடி

Published : Jul 08, 2021, 03:32 PM IST
இந்திய அணியின் அடுத்த கேப்டன் அவருதான் - யுவராஜ் சிங் அதிரடி

சுருக்கம்

ரிஷப் பண்ட் தான் இந்திய அணியின் அடுத்த கேப்டன் என்று யுவரஜ் சிங் தெரிவித்துள்ளார்.  

தோனிக்கு அடுத்து இந்திய அணியின் விக்கெட் கீப்பருக்கான இடத்தை உறுதி செய்துள்ள ரிஷப் பண்ட், இந்திய அணியில் எடுக்கப்பட்ட புதிதில் முதிர்ச்சியில்லாமல் ஆடி, இந்திய அணியில் இடத்தை இழந்தார். 

ஆனால் இப்போது அவரது  பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங் ஆகிய இரண்டுமே முன்பைவிட மேம்பட்டிருக்கிறது. இப்போது முதிர்ச்சியுடன் ஆடுகிறார். பேட்டிங், விக்கெட் கீப்பிங்கில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியில் தனக்கான இடத்தை உறுதி செய்துவிட்ட ரிஷப் பண்ட், ஐபிஎல்லில் டெல்லி கேபிடள்ஸ் அணியை வழிநடத்த கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி தனது கேப்டன்சி திறனையும் நிரூபித்துவிட்டார்.

ஷ்ரேயாஸ் ஐயர் காயத்தால் ஐபிஎல் 14வது சீசனில் ஆடாததன் காரணமாக, டெல்லி கேபிடள்ஸ் அணிக்கு கேப்டனாகும் வாய்ப்பை பெற்ற ரிஷப் பண்ட், ஒரு தேர்ந்த கேப்டனாக செயல்பட்டு, டெல்லி அணிக்கு வெற்றிகளை பெற்றுக்கொடுத்து  புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடிக்க வைத்தார்.

ரிஷப் பண்ட் அவரது கேப்டன்சி திறனை நிரூபித்த நிலையில், இந்திய அணியின் அடுத்த கேப்டன் அவர் தான் என்ற பேச்சு எழுந்துள்ளது.

இந்நிலையில், ரிஷப் பண்ட் குறித்து பேசியுள்ள யுவராஜ் சிங்,  ரிஷப் பண்ட் ஆடம் கில்கிறிஸ்ட் மாதிரியான வீரர். டெஸ்ட் கிரிக்கெட்டில் பின்வரிசையில் அதிரடியாக ஆடி ஆட்டத்தை தலைகீழாக திருப்பவல்ல வீரர் ரிஷப் பண்ட்.

ரிஷப் பண்ட்டை சிறந்த கேப்டனாகவும் நான் பார்க்கிறேன். ஸ்மார்ட்டான புத்திக்கூர்மையான கேப்டன் ரிஷப் பண்ட். ஐபிஎல்லில் டெல்லி அணியை நன்றாக வழிநடத்தினார். எனவே இந்திய அணியின் அடுத்த கேப்டன் அவர்தான் என்று மக்கள் பேசுகிறார்கள் என்று யுவராஜ் சிங் கூறியுள்ளார்.
 

PREV
click me!

Recommended Stories

Virat Kohli: சாதனைக்காக விளையாடினால் என்ன நடக்கும் தெரியுமா? மனம் திறந்த 'கிங்' கோலி!
Virat Kohli Records: கிங் கோலியின் ருத்ரதாண்டவம்.. ஒரே செஞ்சரியில் பல ரெக்கார்டுகள் காலி!