#ENGvsPAK முதல் ஒருநாள்: இங்கி., அணியில் 3 வீரர்கள் அறிமுகம்..! இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

By karthikeyan VFirst Published Jul 8, 2021, 2:27 PM IST
Highlights

இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
 

பாகிஸ்தான் அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுவதற்காக இங்கிலாந்துக்கு சென்றுள்ளது. முதல் ஒருநாள் போட்டி கார்டிஃபில் இன்று நடக்கிறது. 

இந்த தொடருக்காக அறிவிக்கப்பட்டிருந்த ஒயின் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியில் 3 வீரர்கள், 4 அணி நிர்வாகத்தினர் என மொத்தம் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து, அந்த அணி முழுவதுமாக மாற்றப்பட்டு, பென் ஸ்டோக்ஸ் தலைமையில் முற்றிலுமாக வேறு அணி அறிவிக்கப்பட்டது.

அந்த அணியில் நிறைய புதுமுகங்கள் இடம்பெற்றிருந்தனர். அந்தவகையில், இன்றைய போட்டியில் பென் ஸ்டோக்ஸ் தலைமையில் களமிறங்கும் இங்கிலாந்து அணியில், தொடக்க வீரர் ஜாக் க்ராவ்லி, மிடில் ஆர்டர் வீரர் டேனியல் லார்னஸ் மற்றும் ஆல்ரவுண்டர் லெவிஸ் க்ரெகோரி ஆகிய மூவரும் அறிமுகமாவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்பின்னராக ரிஸ்ட் ஸ்பின்னர் மாட் பார்கின்சன் ஆட வாய்ப்புள்ளது.

உத்தேச இங்கிலாந்து அணி:

ஜாக் க்ராவ்லி, ஜேம்ஸ் வின்ஸ், டேவிட் மலான், பென் ஸ்டோக்ஸ்(கேப்டன்), டேனியல் லாரன்ஸ், பென் டக்கெட்(விக்கெட் கீப்பர்), லெவிஸ் க்ரெகோரி, க்ரைக் ஓவர்டன், சாகிப் மஹ்மூத், மாட் பார்கின்சன், ஜேக் பால்.

உத்தேச பாகிஸ்தான் அணி:

இமாம் உல் ஹக், ஃபகர் ஜமான், பாபர் அசாம்(கேப்டன்), முகமது ரிஸ்வான்(விக்கெட் கீப்பர்), சொஹைப் மக்சூத், ஷதாப் கான், முகமது நவாஸ், ஃபஹீம் அஷ்ரஃப், ஷாஹீன் ஷா அஃப்ரிடி, ஹசன் அலி, ஹாரிஸ் ராஃப்.
 

click me!