சச்சினை தொடர்ந்து யூசுஃப் பதான், பத்ரிநாத்துக்கும் கொரோனா பாசிட்டிவ்

Published : Mar 28, 2021, 09:09 PM IST
சச்சினை தொடர்ந்து யூசுஃப் பதான், பத்ரிநாத்துக்கும் கொரோனா பாசிட்டிவ்

சுருக்கம்

 சாலை பாதுகாப்பு டி20 தொடரில் ஆடிய இந்திய முன்னாள் வீரர்களுக்கு அடுத்தடுத்து கொரோனா பாசிட்டிவ் ஆகிவருகிறது.  

சாலை பாதுகாப்பு டி20 தொடர் ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் நடந்துவருகிறது. இந்த ஆண்டுக்கான தொடர் அண்மையில் நடந்து முடிந்தது. ஃபைனலில் இலங்கை லெஜண்ட்ஸை வீழ்த்தி சச்சின் டெண்டுல்கர் தலைமையிலான இந்தியா லெஜண்ட்ஸ் அணி தான் கோப்பையை வென்றது.

சச்சின் டெண்டுல்கருக்கு அண்மையில் கொரோனா பாசிட்டிவ் ஆனது. அதை அவரே டுவிட்டரில் உறுதிப்படுத்தியிருந்தார். கொரோனா பாசிட்டிவ் என்பதால் தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார் சச்சின் டெண்டுல்கர்.

இந்நிலையில், அந்த தொடரில் ஆடிய யூசுஃப் பதானும் தனக்கு கொரோனா உறுதியானதாக தெரிவித்திருக்கிறார். அவரைத்தொடர்ந்து அதிர்ச்சியளிக்கும் விதமாக, அதே தொடரில் இந்தியா சார்பில் ஆடிய தமிழகத்தை சேர்ந்த சுப்ரமணியம் பத்ரிநாத்துக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு டி20 தொடரில் ஆடியதில் 3 வீரர்களுக்கு கொரோனா உறுதியாகியிருக்கிறது. அந்த தொடரில் யுவராஜ் சிங், இர்ஃபான் பதான், முகமது கைஃப், பிரக்யான் ஓஜா உள்ளிட்ட வீரர்களும் அந்த தொடரில் ஆடினர். 
 

PREV
click me!

Recommended Stories

IPL 2026 Longest Six: சூர்யவன்ஷி சிக்ஸர் மழை பொழிந்தாலும் முதலிடத்தில் இல்லை! டாப் 5 சிக்ஸர்கள் அடித்த பேட்ஸ்மேன்கள்!
Vaibhav Suryavanshi: '700 ரன்கள் அடிப்பேன்னு முன்னாடியே எழுதி வச்சிருந்தேன்'.. ரகசியத்தை உடைத்த வைபவ் சூர்யவன்ஷி!