பாகிஸ்தான் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து திடீரென விலகிய யூனிஸ் கான்

By karthikeyan VFirst Published Jun 22, 2021, 8:17 PM IST
Highlights

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து யூனிஸ் கான் திடீரென விலகியுள்ளார்.
 

பாகிஸ்தான் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நியமிக்கப்பட்டார், அந்த அணியின் முன்னாள் லெஜண்ட் கிரிக்கெட்டர் யூனிஸ் கான். அவரது நியமனம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

2022ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடக்கும் டி20 உலக கோப்பை வரை யூனிஸ் கான் பாகிஸ்தான் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக நீடிப்பார் என தெரிவிக்கப்பட்டிருந்ததால், அதற்குள்ளாக பாகிஸ்தான் அணியை வலுவான பேட்டிங் ஆர்டரை கொண்ட அணியாக உலக கோப்பையை வெல்லும் அளவிற்கு தயார்படுத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது.

யூனிஸ் கானின் பயிற்சியில் நியூசிலாந்தில் டெஸ்ட் தொடரை தோற்ற பாகிஸ்தான் அணி, தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வேவுக்கு எதிரான தொடர்களை வென்றது. அடுத்ததாக இங்கிலாந்தில் அந்த அணிக்கு எதிராக பாகிஸ்தான் 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. அதன்பின்னர் வெஸ்ட் இண்டீஸுக்கு செல்கிறது.

அடுத்தடுத்து முக்கியமான சுற்றுப்பயணங்கள் இருக்கும் நிலையில், பாகிஸ்தான் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து  திடீரென விலகியுள்ளார் யூனிஸ் கான். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமே சர்ச்சைக்குரியதுதான். அந்தவகையில், யூனிஸ் கான் பதவி விலகியதற்கான காரணம் குறித்து தெரிவிக்கப்படவில்லை. எனவே கண்டிப்பாக ஏதோ உரசலால் தான் யூனிஸ் கான் விலகியிருக்கிறார்.
 

click me!