சமகாலத்தின் டாப் 5 பேட்ஸ்மேன்கள்.. கோலிக்கு 3ம் இடம்..! பாக்., முன்னாள் வீரர் அதிரடி

Published : Jun 22, 2021, 07:43 PM IST
சமகாலத்தின் டாப் 5 பேட்ஸ்மேன்கள்.. கோலிக்கு 3ம் இடம்..! பாக்., முன்னாள் வீரர் அதிரடி

சுருக்கம்

சமகாலத்தின் டாப் 5 பேட்ஸ்மேன்களை பாகிஸ்தான் முன்னாள் விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் ரஷீத் லத்தீஃப் தேர்வு செய்துள்ளார்.  

விராட் கோலி, கேன் வில்லியம்சன், ஸ்டீவ் ஸ்மித், ஜோ ரூட் ஆகியோருடன் சமகாலத்தின் தலைசிறந்த வீரர்கள் பட்டியலில் பாகிஸ்தானின் பாபர் அசாமும் இணைந்துள்ளார். இவர்களில் ஜோ ரூட்டைத் தவிர மற்ற 4 பேட்ஸ்மேன்களும் அனைத்துவிதமான ஃபார்மட்டுகளிலும் ஆடுகிறார்கள். ரூட் டி20 கிரிக்கெட்டில் ஆடவில்லை.

இந்த ஐவரில் யார் பெஸ்ட் என்ற கேள்வி எழும் நிலையில், அதுகுறித்து பல முன்னாள் வீரர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்துவருகின்றனர்.

அந்தவகையில், இந்த ஐவரையும் திறமையின் அடிப்படையில் வரிசைப்படுத்தியுள்ளார் பாகிஸ்தான் முன்னாள் வீரர் ரஷீத் லத்தீஃப். 

அதன்படி, கேன் வில்லியம்சன், பாபர் அசாம், விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித் மற்றும் ஜோ ரூட் என வரிசைப்படுத்தியுள்ளார். விராட் கோலியை விட பாபர் அசாம் சிறந்தவர் என்று மதிப்பிட்டுள்ளார் ரஷீத் லத்தீஃப். 
 

PREV
click me!

Recommended Stories

ஜெயிலில் கம்பி எண்ணிய டாப் 10 கிரிக்கெட் வீரர்கள்! லிஸ்ட்டில் 2 இந்தியர்கள்! பாகிஸ்தானியர்கள் அதிகம்!
Virat Kohli: 'கம்மி விலைக்கு ஷூ தர்றேன், ஆனா...': டெஸ்ட் கம்பேக் வதந்திக்கு கோலி முற்றுப்புள்ளி