WTC Final 2025: ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங்! எந்த டிவியில் பார்க்கலாம்?

Published : Jun 11, 2025, 03:34 PM IST
sa vs aus test 2025 wtc final

சுருக்கம்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இது தொடர்பான முழு விவரங்களை பார்ப்போம். 

ஆஸ்திரேலியாவும், தென்னாப்பிரிக்காவும் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி கிரிக்கெட்டின் தாயகமான லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று (ஜூன் 11) தொடங்கியுள்ளது. இன்று முதல் நாள் ஆட்டம் நடக்கும் நிலையில், ஜூன் 15ம் தேதி இந்த போட்டி நடைபெறுகிறது. இந்நிலையில், டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா கேப்டன் டெம்பா பவுமா தங்கள் அணி முதலில் பவுலிங் செய்யும் என அறிவித்தார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி

அதன்படி ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. மார்னஸ் லபுஸ்சேன் மற்றும் உஸ்மான் கவாஜா ஓப்பனிங்கில் களமிறங்கி விளையாடி வருகின்றனர். ஆஸ்திரேலியா அணி பேட் கம்மின்ஸ் தலைமையிலும், தென்னாப்பிரிக்கா அணி டெம்பா பவுமா தலைமையிலும் களம் காண்கின்றன. ஆஸ்திரேலிய அணியில் மார்னஸ் லபுஸ்சேன், உஸ்மான் கவாஜா, கேமரூன் கிரீன், ஸ்டீவன் ஸ்மித், டிராவிஸ் ஹெட், பியூ வெப்ஸ்டர், அலெக்ஸ் கேரி, பேட் கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசில்வுட், நாதன் லியோன் பிளேயிங் லெவனில் விளையாடுகின்றனர்.

தென்னாப்பிரிக்கா அணி பிளேயிங் லெவன்

தென்னாப்பிரிக்கா அணியில் எய்டன் மார்க்ரம்,ரியான் ரிக்கல்டன், வியான் முல்டர், டெம்பா பவுமா (கேப்டன்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டேவிட் பெடிங்காம், கைல் வெர்ரின்னே, மார்கோ ஜான்சன், கேசவ் மகாராஜ், ககிசோ ரபாடா, லுங்கி என்கிடி ஆகியோர் பிளேயிங் லெவனில் விளையாடுகின்றனர். போட்டி நடக்கும் லார்ட்ஸ் மைதானத்தை பொறுத்தவரை மேகமூட்டமாக இருக்கும். ஆனால் மழை பெய்ய வாய்ப்பு குறைவு. லெக் சைடில் 63 மீட்டர் தூரம் மற்றும் ஆப் சைடில் 67 மீட்டர் தூரம் என லார்ட்ஸ் மைதானம் நீண்ட தூர பவுண்டரிகளை கொண்டது.

எந்த டிவியில் பார்க்கலாம்?

இது முழுவதும் சமமாக விளையாடும் ஒரு நல்ல பிட்ச் போல் தெரிகிறது. 2வது நாள் பேட்டிங் செய்ய ஒரு சிறந்த நாளாக இருக்கும். பேட்ஸ்மேன்கள் முதலில் விக்கெட்டை இழக்காமல் பொறுமை காத்தால் போகப் போக ரன்கள் அடிக்க முடியும். "மேற்பரப்பு நன்றாகத் தெரிகிறது, ஆனால் மேலே உள்ள சூழ்நிலைகள் முதலில் பந்து வீச வேண்டும் என்று கட்டளையிடுகின்றன இந்த நிலைமைகளுக்கு நாங்கள் சிறந்த அணியைத் தேர்ந்தெடுத்துள்ளோம் என்று நினைக்கிறேன்'' என்று டாசுக்கு பிறகு டெம்பா பவுமா தெரிவித்தார். WTC Final 2025 போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 சேனலில் பார்க்கலாம். இதேபோல் ஓடிடியில் ஜியோ ஹாட்ஸ்டாரிலும் போட்டியை கண்டு ரசிக்கலாம்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இதுதான் bazball ஆட்டம்..! இங்கிலாந்துக்கு பாடம் கற்பித்த ஆஸ்திரேலியா! 3 பேர் அதிரடி அரை சதம்!
வார்த்தையை விட்ட விராட் கோலி..! பிசிசிஐ அதிருப்தியால் மனம் மாற்றம்..! நடந்தது என்ன?