Published : Feb 13, 2023, 02:52 PM ISTUpdated : Feb 13, 2023, 09:20 PM IST

WPL 2023 Auction Live: ஜவான் படத்தில் ஷாருக்கான் உடன் இணையும் மாஸ் ஹீரோ !!

சுருக்கம்

பாலிவுட்டின் முன்னணி நடிகர் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வருகிறது ஜவான் திரைப்படம். இந்த படத்தை பிரபல இயக்குனர் அட்லி இயக்குகிறார். சுமார் 200 கோடியில் உருவாகும் இப்படத்தை ரெட் சில்லிஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் ஷாருக்கானின் மனைவி கௌரி கான் தயாரிக்கிறார். இந்த நிலையில் இப்படத்தில் கேமியோ ரோலில் புஷ்பா பட ஹீரோ அல்லு அர்ஜுன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

WPL 2023 Auction Live:  ஜவான் படத்தில்  ஷாருக்கான் உடன் இணையும் மாஸ் ஹீரோ !!

09:20 PM (IST) Feb 13

மக்கள் செங்கல்லை கையில் எடுப்பதற்கு முன்பு.. எய்ம்ஸ் ஸ்டார்ட் பண்ணுங்க - எச்சரித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

செங்கல்லை பற்றி அனைவரும் பேச ஆரம்பித்துள்ளார்கள். ஒன்றிய அரசுக்கு வைக்கின்ற ஒரே கோரிக்கை மதுரை மாவட்ட மக்கள் அனைவரும் செங்கல்லை கையில் எடுப்பதற்கு முன்பு வேலையை ஆரம்பிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

மேலும் படிக்க

08:15 PM (IST) Feb 13

Haj 2023 : ஹஜ் பயணம் செல்ல விரும்புகிறீர்களா.? தமிழக அரசு அதிரடி அறிவிப்பு - முழு விபரம் உள்ளே !!

ஹஜ் பயணத்திற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க மார்ச் 10 ஆம் தேதி கடைசி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

07:29 PM (IST) Feb 13

விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா.? சீமான் என்ன சொன்னார் தெரியுமா.!

விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்று பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

மேலும் படிக்க

06:39 PM (IST) Feb 13

Aero India 2023 : ஏரோ இந்தியா கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்ட எச்ஏஎல் உருவாக்கும் மல்டி ரோல் ஹெலிகாப்டர் !

மல்டி ரோல் ஹெலிகாப்டரை உருவாக்கி வருகிறது எச்ஏஎல். இது  ஏரோ இந்தியா கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

05:00 PM (IST) Feb 13

பசி, பட்டினியால் இனி ஒரு உயிர் போகக்கூடாது.. வறுமை மட்டும் மாறவில்லை - தேமுதிக தலைவர் விஜயகாந்த் வேதனை !

உணவில்லாமல் உயிரிழந்த இருவரை புதைக்க பணம் இல்லாததால் 7 நாட்கள் பிணத்துடன் அவரது குடும்பத்தினர் இருந்துள்ள சம்பவத்தை கேட்டு எனது மனம் ரணமாகி போனது என்று கூறியுள்ளார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.

மேலும் படிக்க

04:41 PM (IST) Feb 13

இந்திய வீராங்கனைகளை வாரி குவிக்கும் மும்பை இந்தியன்ஸ்

ஹர்மன்ப்ரீத் கௌரை வாங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி, இந்திய ஆல்ரவுண்டர் பூஜா வஸ்ட்ராகரை ரூ.1.9 கோடிக்கும், மற்றொரு இந்திய வீராங்கனை யஸ்டிகா பாட்டியாவை ரூ.1.5 கோடிக்கும் வாங்கியது. 
 

04:01 PM (IST) Feb 13

ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஷஃபாலி வெர்மாவை தட்டி தூக்கிய டெல்லி கேபிடள்ஸ்

இந்திய வீராங்கனைகள் ஜெமிமா ரோட்ரிக்ஸை ரூ.2.2 கோடிக்கும், ஷஃபாலி வெர்மாவை ரூ.2 கோடிக்கும் டெல்லி கேபிடள்ஸ் அணி வாங்கியது. 

04:01 PM (IST) Feb 13

ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஷஃபாலி வெர்மாவை தட்டி தூக்கிய டெல்லி கேபிடள்ஸ்

இந்திய வீராங்கனைகள் ஜெமிமா ரோட்ரிக்ஸை ரூ.2.2 கோடிக்கும், ஷஃபாலி வெர்மாவை ரூ.2 கோடிக்கும் டெல்லி கேபிடள்ஸ் அணி வாங்கியது. 

03:44 PM (IST) Feb 13

இங்கிலாந்து ஆல்ரவுண்டருக்கு அதிக தொகை

இங்கிலாந்து ஆல்ரவுண்டர் நாட் ஸ்கைவர் பிரண்ட்-ஐ ரூ.3.2 கோடி என்ற அதிகமான தொகைக்கு மும்பை இந்தியன்ஸ் அணி எடுத்தது. இந்த ஏலத்தில் இதுவரை இதுதான் 2வது அதிகபட்ச தொகை ஆகும். 
 

03:41 PM (IST) Feb 13

குஜராத் ஜெயிண்ட்ஸின் அருமையான தேர்வு

ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் பெத் மூனியை ரூ.2 கோடிக்கு குஜராத் ஜெயிண்ட்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. 

03:25 PM (IST) Feb 13

ஃபாஸ்ட் பவுலர் ரேணுகா சிங்கை வாங்கியது ஆர்சிபி

இந்திய ஃபாஸ்ட் பவுலர் ரேணுகா தாகூர் சிங்கை ரூ.1.5 கோடிக்கு ஆர்சிபி அணி ஏலத்தில் எடுத்தது. 
 

03:23 PM (IST) Feb 13

தீப்தி ஷர்மா ரூ.2.6 கோடிக்கு ஏலம்

இந்திய ஆல்ரவுண்டர் தீப்தி ஷர்மாவை ரூ.2.6 கோடிக்கு யுபி வாரியர்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. 


 

03:05 PM (IST) Feb 13

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் எல்லிஸ் பெர்ரி

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த எல்லிஸ் பெர்ரி ரூ.1.70 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்.

03:04 PM (IST) Feb 13

ஹர்மன்ப்ரீத் கௌருக்கு ரூ.1.8 கோடி கொடுத்து எடுத்த மும்பை இந்தியன்ஸ்

இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌருக்காக ஆரம்பத்தில் ஆர்சிபி - டெல்லி கேபிடள்ஸ் அணிகள் போட்டியிட்டன. அதன்பின்னர் இந்த போட்டியில் இணைந்த மும்பை இந்தியன்ஸ் அணி ரூ.1.8 கோடிக்கு ஹர்மன்ப்ரீத் கௌரை ஏலத்தில் எடுத்தது. 
 

03:01 PM (IST) Feb 13

குஜராத் ஜெயிண்ட்ஸ் அணியில் அஸ்லேக் ஹார்டெனர்!

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த அஸ்லேக் ஹார்டெனர்- ஐ ரூ.3.20 கோடிக்குகுஜராத் ஜெயிண்ட்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது. 

 

 ர்டெனரை ரூ.3.20 கோடிக்கு

 

02:57 PM (IST) Feb 13

மும்பை இந்தியன்ஸ் அணியில் ஹர்மன்ப்ரீத் கவுர்!

மகளிர் பிரீமியர் லீக் 2023: ரூ.1.80 கோடிக்கு ஹர்மன்ப்ரீத் கவுரை மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.

02:55 PM (IST) Feb 13

ஸ்மிரிதி மந்தனாவை தட்டி தூக்கிய ஆர்சிபி

ரூ.50 லட்சம் அடிப்படை விலையாக கொண்ட இந்திய நட்சத்திர டாப் ஆர்டர் வீராங்கனை ஸ்மிரிதி மந்தனாவிற்காக மும்பை இந்தியன்ஸும் ஆர்சிபியும் கடும் போட்டி போட்டன. கடைசியில் ரூ.3.40 கோடிக்கு ஆர்சிபி அணி ஸ்மிரிதி மந்தனாவை எடுத்தது.