Womens T20 World Cup 2023: டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் முதல் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் மோதல்!

By Rsiva kumarFirst Published Feb 6, 2023, 10:03 AM IST
Highlights

தென் ஆப்பிரிக்காவில் நடக்கும் ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா தனது பரம எதிரியான பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.

ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 10 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரையில் தென் ஆப்பிரிக்காவில் தொடங்குகிறது. இந்தப் போட்டியில் 10 அணிகள் பங்கு பெற்றுள்ளன. மொத்தம் 23 போட்டிகள் நடக்கிறது. 10 அணியும் குரூப் ஏ, குரூப் பி என்று இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் ஒவ்வொரு அணியும் 4 போட்டிகளில் விளையாட வேண்டும். ஒவ்வொரு குரூப்பிலிருந்தும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் மகளிர் டி20 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். அதன் பிறகு 4 அணிகள் பிளே ஆஃப் சுற்றுகளில் போட்டி போடும். கடந்த முறை டைட்டில் வென்ற ஆஸ்திரேலியா இந்த முறையும் வெற்றி பெறும் முனைப்பில் தீவிரம் காட்டி வருகிறது.

கடந்த 2009 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து கோப்பையை வென்றது. நியூசிலாந்து 2ஆம் இடம் பிடித்தது.

2010 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா டி20 உலகக் கோப்பை டைட்டில் வென்று சாம்பியனானது. நியூசிலாந்து 2ஆம் இடம் பிடித்தது.

2012 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா டி20 உலகக் கோப்பை டைட்டில் வென்று சாம்பியனானது. இங்கிலாந்து 2ஆவது இடம் பிடித்தது.

2014 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா டி20 உலகக் கோப்பை டைட்டில் வென்று சாம்பியனானது. இங்கிலாந்து 2ஆவது இடம் பிடித்தது.

தொடர்ந்து 3 முறை டி20 உலகக் கோப்பை டைட்டில் வென்ற அணி என்ற சாதனையை ஆஸ்திரேலியா மகளிர் அணி படைத்துள்ளது.

2016 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் டி20 உலகக் கோப்பை டைட்டில் வென்று சாம்பியனானது. இதில் ஆஸ்திரேலியா 2ஆவது இடம் பிடித்தது.

2018 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா டி20 உலகக் கோப்பை டைட்டில் வென்று சாம்பியனானது. இங்கிலாந்து 2ஆவது இடம் பிடித்தது.

2020 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா டி20 உலகக் கோப்பை டைட்டில் வென்று சாம்பியனானது. இங்கிலாந்து 2ஆவது இடம் பிடித்தது.

தற்போது 2023 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. தென் ஆப்பிரிக்காவில் நடக்கிறது. இதிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று டைட்டில் வெல்லும் முனைப்பில் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறது. 

இந்திய அணி:
 
ஹர்மன்ப்ரீத் கவூர் (கேப்டன்) ஸ்மிருதி மந்தனா,  ஷஃபாலி வர்மா, யாஸ்திகா பாட்டியா, ரிச்சா கோஷ், ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்லீன் தியோல், தீப்தி ஷர்மா, தேவிகா வைத்யா, ராதா யாதவ், ரேணுகா தாக்கூர், அஞ்சலி சர்வானி, பூஜா வஸ்த்ரகர், ராஜேஸ்வரி கயக்வாட், ஷிகா பாண்டே

இந்திய போட்டிகள்:
 
பிப்ரவரி 12 - இந்தியா vs பாகிஸ்தான் - மாலை 6:30
 
பிப்ரவரி 15 - இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ் - மாலை 6:30
 
பிப்ரவரி 18 - இந்தியா vs இங்கிலாந்து - மாலை 6:30
 
பிப்ரவரி 20 - இந்தியா vs அயர்லாந்து - மாலை 6:30
 
ஒவ்வொரு குழுவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிப் போட்டியில் மோதும். இறுதிப் போட்டி வரும் 26 ஆம் தேதி நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை டிஸ்னி+ஹாட்ஸ்டார் மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸில் காணலாம்.

click me!