IPL 2023: கேஎல் ராகுலா? இஷான் கிஷானா? கீப்பருக்கான வேட்டையை தொடங்கிய பிசிசிஐ!

By Rsiva kumar  |  First Published Apr 22, 2023, 2:09 PM IST

ரிஷப் பண்ட் முற்றிலும் உடல் தகுதியுடன் வருவதற்கு இன்னும் 6 முதல் 7 மாதங்கள் வரையில் ஆகும் என்று பிசிசியை அவரது உடல்நிலை குறித்து தகவல் தெரிவித்துள்ளது.


கார் விபத்தில் பலத்த காயமடைந்த நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் டேராடூன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அதன் பிறகு மேல் சிகிச்சைக்கு மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. முழங்கால் பகுதியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதையடுத்து அவர் வீடு திரும்பினார். தற்போது வரையில் ஓய்வில் இருக்கும் ரிஷப் பண்ட் நன்கு குணமடைந்து வருகிறார். ஆனால், மீண்டும் நடைபயிற்சிக்கு கிட்டத்தட்ட 6 முதல் 7 மாதங்கள் வரையில் ஆகும். 

100 சதங்கள் சாதனை எனது 24 வருட கடின உழைப்பு; அதை கோலி முறியடித்தால் நான் வருத்தப்படுவேன் - சச்சின்!

Latest Videos

மீண்டும் கிரிக்கெட்டில் கவனம் செலுத்தும் முன் அவர் முழுமையாக குணமடைய வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அவர் மீண்டும் போட்டி கிரிக்கெட்டில் களமிறங்க நிறைய நேரம் எடுக்கும். ராகுல் மற்றும் இஷான் இரண்டு கீப்பர்களை நாங்கள் இப்போது பார்க்கிறோம், என்று பிசிசிஐ மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். வரும் ஜூன் மாதம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி லண்டனில் நடக்கிறது. இதில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் 20 ஆண்டுகளுக்குப் பிறகு இறுதிப் போட்டியில் மோதுகின்றன. இதையடுத்து வரும் அக்டோபர் மாதம் 50 ஓவர் உலகக் கோப்பை தொடர் நடக்கிறது. தற்போது உள்ள சூழலில் ரிஷப் பண்ட்டால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி மற்றும் உலக கோப்பை கிரிக்கெட் இரண்டிலும் அவரால் பங்கேற்க முடியாது.

IPL 2023: தம்பி (மகன்) இல்லையான்னு கேட்ட நடராஜனின் மகள், எனக்கு மகள் தான் இருக்காள் என்ற தோனி!

இந்த நிலையில் தான் பிசிசிஐன் கவனம் முழுவதும் கேஎல் ராகுல் மற்றும் இஷான் கிஷான் பக்கமாக திரும்பியுள்ளது. தற்போது நடந்து வரும் ஐபிஎல் 2023 கிரிக்கெட் திருவிழாவில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விக்கெட் கீப்பராக இஷான் கிஷானும், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு விக்கெட் கீப்பராக கேஎல் ராகுலும் விளையாடி வருகின்றனர்.

இவரால் தான் இப்படியெல்லாம் செய்ய முடியும்: ஒரே போட்டியில் கேட்ச், ஸ்டெம்பிங், ரன் அவுட்;சாதனை படைத்த தோனி!

ஆனால், இருவரும் பேட்டிங்கில் அவ்வப்போது சொதப்பி வருகின்றனர். இதுவரையில் விளையாடிய 6 போட்டிகளில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி 4 போட்டிகளில் வெற்றி கண்டுள்ளது. 2 போட்டிகளில் தோல்வியடைந்து புள்ளிப்பட்டியலில் 2ஆவது இடம் பிடித்துள்ளது. இதே போன்று மும்பை இந்தியன்ஸ் அணி 5 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் வெற்றியும், 2 போட்டிகளில் தோல்வியும் அடைந்துள்ளது. அதுமட்டுமின்றி புள்ளிப்பட்டியலில் 6ஆவது இடம் பிடித்துள்ளது.

சென்னை என்றாலே ரசிகர்களின் ஆரவாரம்: சேப்பாக்கத்தில் பவுலிங் போடுவது ரொம்பவே சந்தோஷம் - ஆட்டநாயகன் ஜடேஜா!

கேஎல் ராகுல் 8, 20, 18, 35, 74, 39 என்று மோசமான ஃபார்மை வெளிப்படுத்தி வருகிறார். இதே போன்று, இஷான் கிஷான் 10, 32, 31, 58, 38 என்று ரன்கள் சேர்த்து தனது மோசமான ஃபார்மை வெளிப்படுத்தி வருகிறார். இந்தப் பட்டியலில் சஞ்சு சாம்சனும் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடந்து முடிந்த இலங்கை மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர்களில் சஞ்சு சாம்சன் இடம் பெறவில்லை என்பத் குறிப்பிடத்தக்கது.

click me!