சச்சின் டெண்டுல்கர் சொன்னதுதான் நடந்துச்சு.. அதனால் தான் அவர் லெஜண்ட்

By karthikeyan VFirst Published Jul 12, 2020, 3:16 PM IST
Highlights

வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் அணியின் கேப்டன் ஹோல்டர் மீது நம்பிக்கை வைத்து சச்சின் சொன்ன வாக்கு பொய்யாகவில்லை. 
 

இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சவுத்தாம்ப்டனில் நடந்துவருகிறது. கடந்த 8ம் தேதி தொடங்கிய போட்டி இன்றுடன் முடிவடைகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்ஸில் 204 ரன்களும் வெஸ்ட் இண்டீஸ் அணி 318 ரன்களும் அடித்தன. 

முதல் இன்னிங்ஸில் வெஸ்ட் இண்டீஸ் அணி 114 ரன்கள் முன்னிலை பெற்றது. 114 ரன்கள் பின் தங்கிய நிலையில், இரண்டாவது இன்னிங்ஸை ஆடிவரும் இங்கிலாந்து அணி, நான்காம் நாளான நேற்றைய ஆட்ட முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 284 ரன்கள் அடித்துள்ளது. கடைசி நாள் ஆட்டம் இன்று நடந்துவருகிறது.

இந்த போட்டி தொடங்குவதற்கு முன்பாகவே, பிரயன் லாராவுடன் ஆன்லைனில் இந்த போட்டி குறித்து உரையாடிய சச்சின் டெண்டுல்கர், வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஹோல்டர் சிறந்த ஆல்ரவுண்டர் என்றும் ஆனால் அவர் குறைத்து மதிப்பிடப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். 

ஹோல்டர் குறித்து பேசிய சச்சின் டெண்டுல்கர், ஜேசன் ஹோல்டர்(வெஸ்ட் இண்டீஸ் கேப்டன்), மிகவும் குறைத்து மதிப்பிடப்பட்ட ஆல்ரவுண்டர். கீமார் ரோச், ஷெனான் கேப்ரியல் ஆகிய ஃபாஸ்ட் பவுலர்கள் இருந்தாலும், ஹோல்டரும் அணிக்காக விக்கெட்டுகளை வீழ்த்தக்கூடிய சிறந்த பவுலர். பவுலிங்கில் மட்டுமல்லாது பேட்டிங்கும் சிறப்பாக ஆடுவார். அணிக்கு தேவையான நேரத்தில், முக்கியமான 50-55 ரன்களை அடிப்பவர் ஹோல்டர். தொடர்ச்சியாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக பேட்டிங், பவுலிங் என அனைத்துவகையிலும் சிறப்பாக செயல்பட்டுவரும் ஹோல்டர், குறைத்து மதிப்பிடப்பட்டார் என்று சச்சின் டெண்டுல்கர் தெரிவித்தார். 

ரோச், கேப்ரியல் ஆகியோர்  இருந்தாலும் ஹோல்டரும் விக்கெட் எடுக்கக்கூடிய பிரைம் பவுலர் என்று ஆல்ரவுண்டர் ஹோல்டரை பற்றி சச்சின் டெண்டுல்கர் பேசியிருந்த நிலையில், முதல் இன்னிங்ஸில் அதுதான் நடந்தது. முதல் இன்னிங்ஸில் ஹோல்டர் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். கேப்ரியல் 4 விக்கெட்டுகள் வீழ்த்திய நிலையில், ஹோல்டர் அதிகபட்சமாக 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதுவும் முக்கியமான விக்கெட்டுகள். 

பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், ஜாக் கிராவ்லி, ஓலி போப், ஜோஃப்ரா ஆர்ச்சர், மார்க் உட் ஆகிய 6 பேரையும் வீழ்த்தினார் ஹோல்டர். 
 

click me!