உலக கோப்பை 2019: செம பேட்டிங் ஆர்டருடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ்.. பாகிஸ்தான் முதலில் பேட்டிங்

By karthikeyan VFirst Published May 31, 2019, 3:07 PM IST
Highlights

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஹோல்டர், பாகிஸ்தான் அணியை பேட்டிங் செய்ய பணித்தார்.

உலக கோப்பை தொடர் நேற்று தொடங்கி நடந்துவருகிறது. இன்றைய போட்டியில் பாகிஸ்தானும் வெஸ்ட் இண்டீஸும் மோதுகின்றன. 

நாட்டிங்காமில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஜேசன் ஹோல்டர் பவுலிங் தேர்வு செய்தார். இரு அணிகளுமே நல்ல பேட்டிங் ஆர்டரை கொண்ட அணி என்பதால் கண்டிப்பாக ஹை ஸ்கோரிங் போட்டியாக அமையும். 

வெஸ்ட் இண்டீஸ் அணி, நியூசிலாந்துக்கு எதிரான பயிற்சி போட்டியில் 400 ரன்களுக்கு மேல் குவித்து மிரட்டியது. பாகிஸ்தான் அணியின் பேட்டிங் ஆர்டரும் வலுவாகவே உள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான அண்மை தொடரில் தொடர்ச்சியாக 3 போட்டிகளில் 340 ரன்களுக்கு மேல் குவித்தது பாகிஸ்தான் அணி. 

கெய்ல், ரசல், ஹோப், ஹெட்மயர், பூரான், ஹோல்டர், ஒஷேன் தாமஸ் என வெஸ்ட் இண்டீஸ் அணி சிறந்த அணியாகவே திகழ்கிறது. பாகிஸ்தான் அணியும் இளமையும் அனுபவமும் கலந்த சிறந்த அணியாக உள்ளது. பாகிஸ்தான் அணியில் அனுபவ வீரர் ஷோயப் மாலிக், ஆல்ரவுண்டர் ஆசிஃப் அலி, இளம் ஃபாஸ்ட் பவுலர் ஷாஹின் அஃப்ரிடி ஆகியோர் அணியில் இல்லை. நல்ல ஃபார்மில் தொடர்ச்சியாக சிறப்பாக ஆடிவரும் ஹாரிஸ் சொஹைல், இமாத் வாசிம் ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர். 

வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர் லெவிஸ் மற்றும் ஃபாஸ்ட் பவுலர் கேப்ரியல் ஆகியோர் உடற்தகுதியுடன் இல்லை. லெவிஸ் ஆடாததால் கெய்லுடன் ஷாய் ஹோப் தொடக்க வீரராக களமிறங்க உள்ளார். 

பாகிஸ்தான் அணி:

ஃபகார் ஜமான், இமாம் உல் ஹக், பாபர் அசாம், ஹாரிஸ் சொஹைல், முகமது ஹஃபீஸ், சர்ஃபராஸ் அகமது(கேப்டன், விக்கெட் கீப்பர்), இமாத் வாசிம், ஹசன் அலி, ஷதாப் கான், முகமது அமீர், வஹாப் ரியாஸ்.

வெஸ்ட் இண்டீஸ் அணி:

கிறிஸ் கெய்ல், ஷாய் ஹோப்(விக்கெட் கீப்பர்), டேரன் பிராவோ, ஹெட்மயர், நிகோலஸ் பூரான், ஆண்ட்ரே ரசல், ஜேசன் ஹோல்டர்(கேப்டன்), பிராத்வெயிட், நர்ஸ், ஷெல்டன் கோட்ரெல், ஒஷேன் தாமஸ்.
 

click me!