
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று 1-0 என முன்னிலை வகிக்கும் நிலையில், 2வது டி20 போட்டி இன்று கொல்கத்தா ஈடன் கார்டனில் நடக்கிறது.
1-0 என முன்னிலை வகிக்கும் இந்திய அணி, 2வது டி20 போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை வெல்லும் முனைப்பில் களமிறங்குகிறது. இந்தியாவை வீழ்த்தி டி20 தொடரை வெல்லும் வாய்ப்பை தக்கவைக்கும் முனைப்பில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றியை எதிர்நோக்கி களமாடுகிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் கைரன் பொல்லார்டு ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடுகிறது.
இந்த போட்டிக்கான இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கடந்த போட்டியில் ஆடிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் இந்திய அணி களமிறங்குகிறது. எந்த மாற்றமும் செய்ய வேண்டியதற்கான அவசியம் இல்லை என்பதால், அதே அணியுடன் ஆடுகிறது.
இந்திய அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன், விராட் கோலி, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், வெங்கடேஷ் ஐயர், தீபக் சாஹர், புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல், ரவி பிஷ்னோய், யுஸ்வேந்திர சாஹல்.
வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஒரு மாற்றம் மட்டும் செய்யப்பட்டுள்ளது. ஜேசன் ஹோல்டர் ஃபிட்டாகி இந்த போட்டியில் ஆடுவதால், ஃபேபியன் ஆலன் நீக்கப்பட்டுள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் அணி:
பிரண்டன் கிங், கைல் மேயர்ஸ், நிகோலஸ் பூரன் (விக்கெட் கீப்பர்), ரோஸ்டான் சேஸ், ரோவ்மன் பவல், கைரன் பொல்லார்டு (கேப்டன்), ஜேசன் ஹோல்டர், ஒடீன் ஸ்மித், அகீல் ஹுசைன், ரொமாரியோ ஷெஃபெர்டு, ஷெல்டான் காட்ரெல்.