#WIvsAUS ஆஸி.,க்கு எதிரான ஒருநாள் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு

Published : Jul 08, 2021, 10:23 PM IST
#WIvsAUS ஆஸி.,க்கு எதிரான ஒருநாள் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு

சுருக்கம்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.  

வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள ஆஸ்திரேலிய அணி, 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடவுள்ளது.

முதலில் டி20 தொடர் நடக்கிறது. முதல் டி20 போட்டி நாளை(ஜூலை 9) நடக்கிறது. ஜூலை 20ம் தேதி முதல் ஒருநாள் போட்டிகள் நடக்கின்றன.

இந்நிலையில், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. பொல்லார்டு தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியில், இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் சேர்க்கப்படாமல் இருந்த ஹெட்மயர், ஷெல்டன் காட்ரெல், ரோஸ்டன் சேஸ் ஆகிய மூவரும் இந்த தொடரில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் அணி

பொல்லார்டு (கேப்டன்), ஷேய் ஹோப் (துணை கேப்டன்), ஃபேபியன் ஆலன், டேரன் பிராவோ, ரோஸ்டன் சேஸ், ஷெல்டான் காட்ரெல், ஹெட்மயர், ஜேசன் ஹோல்டர், அகேல் ஹொசைன், அல்ஸாரி ஜோசப், எவின் லூயிஸ், ஜேசன் முகமது, ஆண்டர்சன் ஃபிலிப், நிகோலஸ் பூரன், ரொமேரியோ ஷெப்பர்ட்.
 

PREV
click me!

Recommended Stories

விராட் கோலி மேஜிக் இன்னிங்ஸ்.. புகழ்ந்து தள்ளிய பயிற்சியாளர்.. அட! இவரா இப்படி சொன்னது!
IND vs NZ: இது வேலைக்கு ஆகாது.. இந்திய அணியை வறுத்தெடுத்த ஜாம்பவான். கடும் விமர்சனம்!