WI vs NZ: நியூசிலாந்து சுமார் பேட்டிங்! ஷமர் ப்ரூக்ஸ் அதிரடி அரைசதம்; முதல் ODIயில் வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி

By karthikeyan VFirst Published Aug 18, 2022, 1:46 PM IST
Highlights

நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி  பெற்று 1-0 என முன்னிலை வகிக்கிறது.
 

நியூசிலாந்து அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரை நியூசிலாந்து அணி 2-1 என வென்றது.

அதைத்தொடர்ந்து ஒருநாள் தொடர் நடக்கிறது. முதல் ஒருநாள் போட்டி பார்படாஸில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

இதையும் படிங்க - சூர்யகுமாருக்கு ஏற்ற பேட்டிங் ஆர்டர் இதுதான்..! லெஜண்ட் ரிக்கி பாண்டிங் கருத்து

வெஸ்ட் இண்டீஸ் அணி:

ஷேய் ஹோப் (விக்கெட் கீப்பர்), கைல் மேயர்ஸ், ஷமர் ப்ரூக்ஸ், நிகோலஸ் பூரன் (கேப்டன்), ஜெர்மைன் பிளாக்வுட், கீஸி கார்டி, ஜேசன் ஹோல்டர், அகீல் ஹுசைன், யானிக் காரியா, அல்ஸாரி ஜோசஃப், கெவின் சின்க்லைர்.

நியூசிலாந்து அணி:

மார்டின் கப்டில், ஃபின் ஆலன், கேன் வில்லியம்சன் (கேப்டன்), டெவான் கான்வே, டாம் லேதம் (விக்கெட் கீப்பர்), டேரைல் மிட்செல், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சாண்ட்னெர், டிம் சௌதி, லாக்கி ஃபெர்குசன், டிரெண்ட் போல்ட்.

இதையும் படிங்க - இந்திய அணியில் தொடர்ந்து கேப்டன்சி மாற்றம்..! பிசிசிஐ தலைவர் கங்குலி விளக்கம்

முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணியில் கப்டில் (24), ஃபின் ஆலன்(25), கேப்டன் கேன் வில்லியம்சன் (30), டேரைல் மிட்செல் (20), பிரேஸ்வெல் (31) என அனைத்து வீரர்களுக்குமே நல்ல தொடக்கம் கிடைத்தது. ஆனால் இவர்களில் ஒருவர் கூட அதை பெரிய இன்னிங்ஸாக மாற்றவில்லை. அனைவருமே சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, நியூசிலாந்து அணி 45.2 ஓவரில் 190 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

191 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஷமர் ப்ரூக்ஸ் அடித்து ஆடி அரைசதம் அடித்தார். அபாரமாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்த ஷமர் ப்ரூக்ஸ் 79 ரன்களை குவித்தார். இலக்கு எளிதானது என்பதால், ஷமர் ப்ரூக்ஸின் அதிரடியான பேட்டிங்கால் 39வது ஓவரிலேயே இலக்கை அடித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-0 என ஒருநாள் தொடரில் முன்னிலை வகிக்கிறது வெஸ்ட் இண்டீஸ் அணி.
 

click me!