டி20 கிரிக்கெட் வரலாற்றில் தரமான சம்பவம் பண்ண நம்ம வாஷிங்டன் சுந்தர்.. முதல் இந்திய வீரர்

By karthikeyan VFirst Published Aug 4, 2019, 3:12 PM IST
Highlights

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டி20 போட்டியில், டி20 கிரிக்கெட் வரலாற்றிலேயே ஒரு தரமான சம்பவத்தை செய்துள்ளார் வாஷிங்டன் சுந்தர். 

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான முதல் டி20 போட்டியில் இந்திய அணி வென்றது. 

முதல் இரண்டு டி20 போட்டிகள் மட்டும் அமெரிக்காவில் நடக்கிறது. நேற்று நடந்த முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது போட்டி இன்று நடக்கிறது. 

முதல் போட்டியில் வாஷிங்டன் சுந்தர் தரமான சம்பவம் ஒன்றை செய்துள்ளார். அந்த போட்டியில் 2 ஓவர்களை வீசி 18 ரன்களை விட்டுக்கொடுத்த சுந்தர் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார். 18வது ஓவரில் வின்னிங் ஷாட் அடித்து சிக்ஸர் விளாசி போட்டியை வெற்றிகரமாக முடித்துவைத்தார் வாஷிங்டன் சுந்தர். 

முதல் ஓவரை வீசிய வாஷிங்டன் சுந்தர், காம்ப்பெல்லின் விக்கெட்டை வீழ்த்தினார். கடைசியில் வின்னிங் ஷாட்டும் அடித்தார். இதன்மூலம் டி20 போட்டியில் முதல் விக்கெட்டை வீழ்த்தி, வின்னிங் ரன்னையும் அடித்த இரண்டாவது வீரர் என்ற சாதனையை சுந்தர் படைத்துள்ளார். 

இதற்கு முன்னர் 2015ம் ஆண்டு ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டியில் வங்கதேச வீரர் மஷ்ரஃபே மோர்டஸா இந்த சம்பவத்தை செய்துள்ளார். அவரைத்தவிர வேறு யாருமே அப்படி செய்ததில்லை. இந்நிலையில், அந்த பட்டியலில் இரண்டாவது வீரராக சுந்தர் இணைந்துள்ளார். 
 

click me!