நீ பவுலிங் போடுறதுக்கு முன்னாடியே 2 விக்கெட்டை போட்ட கெத்தான ஆளுடா தம்பி.. நீ கலக்கு.. முன்னாள் வீரர்களின் மூக்கை உடைத்த கம்பீர்

Published : Aug 04, 2019, 02:47 PM IST
நீ பவுலிங் போடுறதுக்கு முன்னாடியே 2 விக்கெட்டை போட்ட கெத்தான ஆளுடா தம்பி.. நீ கலக்கு.. முன்னாள் வீரர்களின் மூக்கை உடைத்த கம்பீர்

சுருக்கம்

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் நவ்தீப் சைனி, 4 ஓவர்கள் வீசி 17 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அறிமுக போட்டியின் முதல் ஓவரிலேயே விக்கெட் வீழ்த்தியதுடன் இன்னிங்ஸின் கடைசி ஓவரை மெய்டன் ஓவராக வீசி அசத்தினார். இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்த முதல் போட்டியிலேயே சைனி மிரட்டியுள்ளார்.   

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஃபாஸ்ட் பவுலர் நவ்தீப் சைனி இந்திய அணியில் அறிமுகமானார். அறிமுக போட்டியிலேயே அபாரமாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

4 ஓவர்கள் வீசி 17 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அறிமுக போட்டியின் முதல் ஓவரிலேயே விக்கெட் வீழ்த்தியதுடன் இன்னிங்ஸின் கடைசி ஓவரை மெய்டன் ஓவராக வீசி அசத்தினார். இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்த முதல் போட்டியிலேயே சைனி மிரட்டியுள்ளார். 

இந்நிலையில், சைனியை ஆரம்பத்தில் ஓரங்கட்ட நினைத்தவர்களை கம்பீர் தற்போது சீண்டியுள்ளார். ஹரியானா மாநிலத்தை சேர்ந்த சைனி, 150 கிமீ வேகத்தில் வீசக்கூடிய திறன் பெற்றவர். இவரது திறமையை கண்ட கம்பீர், சைனியை டெல்லி ரஞ்சி அணியில் சேர்க்க வலியுறுத்தினார். அப்போது டெல்லி ரஞ்சி அணிக்காக செலக்சன் கமிட்டியில் இருந்த முன்னாள் வீரர்கள் பிஷன் சிங் பேடி மற்றும் சேத்தன் சவுகான் ஆகிய இருவரும் வெளிமாநில வீரரை டெல்லி அணியில் ஆடவைக்கமுடியாது என்று காரணம் காட்டி கம்பீரின் கோரிக்கையை புறக்கணித்தனர். 

தற்போது இந்திய அணிக்காக ஆடவந்துவிட்டார் சைனி. இந்நிலையில், இந்திய அணிக்காக ஆடும் முன்னரே, பிஷன் சிங் பேடி மற்றும் சவுகான் என்ற 2 விக்கெட்டுகளை சைனி எடுத்துவிட்டார் என்று அவர்கள் இருவரையும் குத்திக்காட்டும்வகையில் சீண்டியுள்ளார் கம்பீர். 

PREV
click me!

Recommended Stories

T20 World Cup: வெறும் 4 மேட்ச்... ஆனா அடி இடி மாதிரி..! ICC 'தொடர் நாயகன்' ரேஸில் சஞ்சு சாம்சன்..
கிவிஸின் 'சாபத்தை' உடைக்குமா நீலப்படை? - இந்தியாவின் வெற்றியை கணிக்க உதவும் 4 லக்கி ஃபேக்டர்ஸ்!