தடை முடிந்து வந்ததுமே ஹைதராபாத்தில் காட்டடி அடித்து தெறிக்கவிட்ட வார்னர்.. சன்ரைசர்ஸ் அணி செம ஹேப்பி

By karthikeyan VFirst Published Mar 18, 2019, 12:56 PM IST
Highlights

கடந்த சீசன்களை விட இந்த சீசன் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும். ஏனெனில் உலக கோப்பைக்கான இந்திய அணியில் ஒருசில வீரர்களுக்கான தேவை இருப்பதால் அந்த இடங்களை பிடிக்கும் முனைப்பில் இந்த ஐபிஎல்லில் சில வீரர்கள் ஆடுகின்றனர். அதனால் அவர்கள் ஆக்ரோஷமாக ஆடுவார்கள்.
 

ஐபிஎல் 11 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்த நிலையில், 12வது சீசன் வரும் 23ம் தேதி தொடங்குகிறது. 

23ம் தேதி நடக்கும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான தோனி தலைமையிலான சிஎஸ்கே அணியும் கோலி தலைமையிலான ஆர்சிபி அணியும் மோதுகின்றன. 

கடந்த சீசன்களை விட இந்த சீசன் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும். ஏனெனில் உலக கோப்பைக்கான இந்திய அணியில் ஒருசில வீரர்களுக்கான தேவை இருப்பதால் அந்த இடங்களை பிடிக்கும் முனைப்பில் இந்த ஐபிஎல்லில் சில வீரர்கள் ஆடுகின்றனர். அதனால் அவர்கள் ஆக்ரோஷமாக ஆடுவார்கள்.

அதுமட்டுமல்லாமல் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஓராண்டு தடையில் இருந்த வார்னர் மற்றும் ஸ்மித்தின் தடை முடிந்துவிட்டது. அதனால் கடந்த சீசனில் ஆடாத அவர்கள், இந்த சீசனில் ஆடுகின்றனர். தடையில் இருந்து மீண்டு வந்துள்ளதால் ஆக்ரோஷமாக ஆடுவார்கள் என்பதில் துளியும் ஐயமில்லை. 

இந்தியாவிற்கு ஏற்கனவே வந்துவிட்ட வார்னர், ஹைதராபாத்தில் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். வார்னர் வந்திருப்பது, கடந்த முறை இறுதி போட்டிக்கு சென்ற சன்ரைசர்ஸ் அணிக்கு இந்த முறை மேலும் உத்வேகத்தை அளித்துள்ளது. 

பயிற்சியின் போது சன்ரைசர்ஸ் அணியில் இருக்கும் வீரர்களை ஏ மற்றும் பி என இரு அணிகளாக பிரித்து பயிற்சி போட்டி நடத்தப்பட்டது. அதில் முதலில் பேட்டிங் ஆடிய ஏ அணியில் வார்னர் இருந்தார். அதிரடியாக ஆடி பவுண்டரியும் சிக்ஸருமாக பறக்கவிட்ட வார்னர், 38 பந்துகளில் 67 ரன்களை குவித்தார். வார்னரின் வழக்கமான ஆக்ரோஷமான அதிரடி, அந்த அணியை உற்சாகப்படுத்தியுள்ளது. வார்னர் மட்டுமல்லாமல்  மனீஷ் பாண்டேவும் நன்றாக ஆடினார். அந்த அணி 212 ரன்களை குவித்தது. ஆனால் சன்ரைசர்ஸ் பி அணி 213 ரன்கள் என்ற இலக்கை விரட்டி வெற்றி பெற்றது. 

தடையிலிருந்து மீண்டு வந்துள்ள வார்னர், இந்த சீசனில் செம காட்டு காட்டுவார் என்பதில் துளியும் ஐயமில்லை. 

click me!