வாரி வழங்கும் வள்ளல் வார்னர்.. இளம் ரசிகருக்கு வாழ்நாள் முழுதும் மறக்கமுடியாத சர்ப்ரைஸ் கொடுத்த வார்னர்.. வீடியோ

Published : Jan 07, 2020, 02:18 PM IST
வாரி வழங்கும் வள்ளல் வார்னர்.. இளம் ரசிகருக்கு வாழ்நாள் முழுதும் மறக்கமுடியாத சர்ப்ரைஸ் கொடுத்த வார்னர்.. வீடியோ

சுருக்கம்

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் தடையை அனுபவித்து மீண்டும் அணிக்கு திரும்பியுள்ள வார்னர், தனது செயல்களின் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளை கொள்கிறார்.   

ஆஸ்திரேலிய அணி நியூசிலாந்துக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என வென்றது. சிட்னியில் நடந்த கடைசி போட்டியில் 279 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது. 

அந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் வார்னர் சிறப்பாக ஆடி சதமடித்து அசத்தினார். இந்த போட்டியின்போது, பயிற்சியின் இடையே, அங்கிருந்த இளம் ரசிகருக்கு தனது பேட்டை கொடுத்து அந்த சிறுவனை மகிழ்ச்சிப்படுத்தியுள்ளார் வார்னர். வார்னர் பயிற்சி செய்துவிட்டு ஓய்வறைக்கு திரும்பும்போது, அங்கிருந்த சிறுவன், வார்னரை பார்த்துக்கொண்டிருந்தான். அப்போது அந்த சிறுவன் எதிர்பார்த்திராத வகையில், தனது பேட்டை அவனுக்கு கொடுத்தார் வார்னர். அதை அங்கிருந்த மற்றொரு ரசிகர்  வீடியோ எடுத்து டுவிட்டரில் பதிவிட்டார். 

உலக கோப்பையின்போது, தனது ஆட்டநாயகன் விருதை சிறுவயது ரசிகனுக்கு வழங்கிய வார்னர், இந்த டெஸ்ட் போட்டியின் போது கூட, இதற்கு முன்னர் ஹெல்மெட், க்ளௌஸ் ஆகியவற்றையும் கொடுத்துள்ளார். இவ்வாறு வார்னர், சிறுவர்களை ஏமாற்றாமல், அவர்களை உற்சாகமும் மகிழ்ச்சியும் படுத்தும் விதமாக தனது பொருட்களை வழங்குவது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் தன் மீது அதிருப்தியில் இருந்த ரசிகர்களை, கொஞ்சம் கொஞ்சமாக இந்த மாதிரி குஷிப்படுத்திவருகிறார் வார்னர். 

PREV
click me!

Recommended Stories

உலகக்கோப்பை திருவிழாவுக்கு தயாராகும் இந்தியா.. பயிற்சி ஆட்டங்களுக்கான அட்டவணை வெளியீடு
U19 உலகக்கோப்பையில் சதம் விளாசிய விஹான் மல்ஹோத்ரா.. திணறும் ஜிம்பாபே