வார்னர், லபுஷேன் அரைசதம்.. ஆஸ்திரேலிய அணி அபார பேட்டிங்

Published : Nov 29, 2019, 02:42 PM IST
வார்னர், லபுஷேன் அரைசதம்.. ஆஸ்திரேலிய அணி அபார பேட்டிங்

சுருக்கம்

ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிவரும் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் வார்னர் மற்றும் லபுஷேன் ஆகிய இருவரும் அரைசதம் அடித்து ஆடிவருகின்றனர்.   

ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் இன்று பகலிரவு போட்டியாக நடந்துவருகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. தொடக்க வீரர் ஜோ பர்ன்ஸ் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து வார்னருடன் மார்னஸ் லபுஷேன் ஜோடி சேர்ந்தார். முதல் விக்கெட் விரைவில் விழுந்தாலும் அதன்பின்னர் வார்னர்ம் லபுஷேனும் இணைந்து சிறப்பாக ஆடிவருகின்றனர்.

சிறப்பாக ஆடிய வார்னர் அரைசதம் அடித்தார். இருவரும் நன்றாக ஆடிக்கொண்டிருந்த நிலையில், மழையால் ஆட்டம் சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. 22 ஓவர்கள் வீசப்பட்டிருந்த நிலையில், ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது. மழை நின்றதும் தாமதமாக இரண்டாவது செசன் தொடங்கியது. 

இரண்டாவது செசன் தொடங்கிய சிறிது நேரத்தில் லபுஷேனும் அரைசதம் கடந்தார். இரண்டு செசன் முடிந்துவிட்டது. இரவு உணவு இடைவேளை வரை ஆஸ்திரேலிய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் அடித்துள்ளது. வார்னர் 72 ரன்களுடனும் லபுஷேன் 60 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 

PREV
click me!

Recommended Stories

Historic Win: ஆண்கள் சொதப்பிய மண்ணில் பெண்கள் சாதனை! இங்கிலாந்துக்கு எதிரான வெற்றிக்கு இதுதான் காரணம
MS Dhoni in CSK: சென்னை அணியின் பயிற்சியாளராகும் MSD..! CSKவில் மாஸ் கம்பேக் கொடுக்கும் தோனி..!