ஆஸ்திரேலிய அணி அதிரடி தொடக்கம்.. பாகிஸ்தான் பவுலிங்கை பொளந்துகட்டிய ஃபின்ச் - வார்னர்

Published : Jun 12, 2019, 05:11 PM IST
ஆஸ்திரேலிய அணி அதிரடி தொடக்கம்.. பாகிஸ்தான் பவுலிங்கை பொளந்துகட்டிய ஃபின்ச் - வார்னர்

சுருக்கம்

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்கள் வார்னரும் ஃபின்ச்சும் அதிரடியாக ஆடி அபாரமான தொடக்கத்தை அமைத்து கொடுத்துள்ளனர். 

உலக கோப்பை தொடரில் இன்று டௌண்டனில் நடந்துவரும் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஆடிவருகின்றன. 

இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் சர்ஃபராஸ் அகமது பவுலிங்கை தேர்வு செய்தார். ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்கள் வார்னர் மற்றும் ஃபின்ச் ஆகிய இருவரும் தொடக்கம் முதலே தெளிவாக ஆடினர். வார்னர் நிதானமாக ஆட, ஃபின்ச் அதிரடியாக ஆடி ரன்களை சேர்த்தார். 

வார்னர் - ஃபின்ச் தொடக்க ஜோடியை பிரிக்கமுடியாமல் பாகிஸ்தான் அணி திணறியது. ஹஃபீஸ் வீசிய 17வது ஓவரில் 2 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சரை அடுத்தடுத்த பந்துகளில் அடித்து மிரட்டிய ஃபின்ச், அரைசதத்திகு பிறகு மீண்டும் ஹஃபீஸின் மற்றொரு ஓவரையும் அடித்து நொறுக்கினார். ஹஃபீஸ் வீசிய 21வது ஓவரில் தொடர்ச்சியாக 2 சிக்சர்கள் அடித்து மிரட்டினார். ஃபின்ச்சை தொடர்ந்து வார்னரும் அரைசதத்தை அடித்தார். 

அதிரடியாக ஆடிய ஃபின்ச் 82 ரன்களில் முகமது அமீரின் வேகத்தில் வீழ்ந்தார். முதல் விக்கெட்டுக்கு வார்னர் - ஃபின்ச் தொடக்க ஜோடி 146 ரன்களை குவித்தது. இதையடுத்து வார்னருடன் ஜோடி சேர்ந்த ஸ்மித் வெறும் 10 ரன்களில் ஆட்டமிழந்தார். வார்னர் சதத்தை நோக்கி ஆடிவருகிறார்.

PREV
click me!

Recommended Stories

IPL 2022 Playoff Scenarios: பிளேஆஃப் ரேஸில் யாருக்கு இடம்? சிஎஸ்கே-க்கு வாய்ப்பு உள்ளதா? முழு விவரம்
ICC ODI Rank: நம்பர் 1 இடத்தில் ‘கெத்து’ காட்டும் இந்தியா.. ஆஸ்திரேலியா எந்த இடம்?