சச்சினை சின்ன பையனா பார்த்தேன்.. இன்றைக்கு இவ்வளவு பெரிய ஜாம்பவான்!! 30 ஆண்டுகால உறவை பகிர்ந்த வக்கார் யூனிஸ்

By karthikeyan VFirst Published Jul 20, 2019, 1:10 PM IST
Highlights

சச்சின் டெண்டுல்கர், 1989ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டுவரை 24 ஆண்டுகள் இந்திய அணியில் ஆடினார். 2013ம் ஆண்டு தான் சச்சின் டெண்டுல்கர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றார். அவர் ஓய்வு பெற்று ஐந்தாண்டுகள் ஆன உடனேயே சச்சின் ஹால் ஆஃப் ஃபேமில் இடம்பிடித்துவிட்டார்.  

சர்வதேச கிரிக்கெட்டில் தலைசிறந்து விளங்கிய வீரர்கள் ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் சேர்க்கப்பட்டு கௌரவிக்கப்படுவது வழக்கம். 2019ம் ஆண்டுக்கான ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் இடம்பிடித்தார். தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் ஃபாஸ்ட் பவுலர் ஆலன் டொனால்டு மற்றும் ஆஸ்திரேலிய மகளிர் அணியின் முன்னாள் ஃபாஸ்ட் பவுலர் கேத்ரின் ஃபிட்ஸ்பாட்ரிக் ஆகியோரும் இடம்பிடித்துள்ளனர்.

ஐசிசி ஹால் ஆஃப் ஃபேமில் இடம்பிடிக்கும் ஆறாவது இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கர். சச்சினுக்கு முன்னதாக பிஷன் பேடி, கவாஸ்கர், கபில் தேவ், அனில் கும்ப்ளே, ராகுல் டிராவிட் ஆகிய ஐந்து வீரர்களும் ஹால் ஆஃப் ஃபேமில் இடம்பிடித்துள்ளனர். ராகுல் டிராவிட் கடந்த ஆண்டு இடம்பிடித்தார். 

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்று 5 ஆண்டுகள் ஆனபிறகுதான் இந்த பட்டியலில் இடம்பிடிக்க முடியும். மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர், 1989ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டுவரை 24 ஆண்டுகள் இந்திய அணியில் ஆடினார். 2013ம் ஆண்டு தான் சச்சின் டெண்டுல்கர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றார். அவர் ஓய்வு பெற்று ஐந்தாண்டுகள் ஆன உடனேயே சச்சின் ஹால் ஆஃப் ஃபேமில் இடம்பிடித்துவிட்டார்.  சர்வதேச கிரிக்கெட்டில் பேட்டிங்கின் பெரும்பாலான சாதனைகளுக்கு சச்சின் டெண்டுல்கர் தான். 

சச்சின் டெண்டுல்கர் ஹால் ஆஃப் ஃபேமில் இடம்பிடித்த நிலையில், சச்சினுடனான நினைவுகளை பகிர்ந்து சச்சின் மீதான அன்பை வெளிப்படுத்தியதோடு, அவருக்காக பெருமைப்படுகிறார் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வக்கார் யூனிஸ். 

1989ல் சச்சின் அறிமுக போட்டியில் ஆடிய சிறிய இன்னிங்ஸ் மற்றும் 1999ல் சென்னையில் நடந்த போட்டியில் அடித்த சதம் ஆகிய இரண்டையும் என்னால் மறக்கமுடியாது. ஆடுகளத்தில் இருந்து இப்போது வர்ணனையாளர் பாக்ஸில்.. 30 ஆண்டுகால அருமையான நினைவுகள் சச்சினுடன்.. சச்சினுடன் இணைந்து வர்ணனை செய்வது மகிழ்ச்சியாக உள்ளது என்று வக்கார் யூனிஸ் டுவீட் செய்துள்ளார். 

I can’t forget a little inning he played at Sialkot 1989 and a Hundred💯at Chennai 1999.. From pitch side to the commentary box.. Thirty unbelievable and amazing years.. Lovely sharing commentary box with you pic.twitter.com/8XNPfjCA1t

— Waqar Younis (@waqyounis99)

பாகிஸ்தானுக்கு எதிராக 1989ல் அறிமுகமான சச்சின் டெண்டுல்கர், தனது முதல் இன்னிங்ஸில் 15 ரன்கள் மட்டுமே அடித்து ஆட்டமிழந்தார். சச்சினை அந்த போட்டியில் அவுட்டாக்கியது வக்கார் யூனிஸ்தான் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

click me!