இந்தியாவுக்கு எதிரான போட்டியில் அவருலாம் தேவையே இல்லங்க.. சீனியர் வீரரை தூக்கிப்போட வலியுறுத்தும் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன்

By karthikeyan VFirst Published Jun 14, 2019, 1:40 PM IST
Highlights

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணியின் சீனியர் வீரர் ஒருவரை நீக்குமாறு வக்கார் யூனிஸ் வலியுறுத்தியுள்ளார். 

உலக கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான முக்கியமான போட்டி வரும் 16ம் தேதி நடக்கவுள்ளது. இந்தியா - பாகிஸ்தான் போட்டி என்றாலே அனல் பறக்கும். இரு நாட்டு ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் கிரிக்கெட் ரசிகர்கள் பேராவலுடன் அந்த போட்டியை பார்ப்பார்கள். இதுவரை உலக கோப்பை தொடரில் இந்திய அணியை பாகிஸ்தான் வீழ்த்தியதே இல்லை. 

எனவே முதன்முறையாக உலக கோப்பை தொடரில் இந்திய அணியை வீழ்த்தும் முனைப்பில் பாகிஸ்தான் உள்ளது. ஆனால் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியை பாகிஸ்தான் அணி வீழ்த்துவது கடினம். இந்தியாவுக்கு எதிரான போட்டி பாகிஸ்தான் அணிக்கு முக்கியமான போட்டி. 

பாகிஸ்தான் அணி 4 போட்டிகளில் ஆடி வெறும் ஒரு வெற்றி மற்றும் கைவிடப்பட்ட ஒரு போட்டிக்கு ஒரு புள்ளி என மொத்தம் 3 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளது. இந்திய அணியோ முதலிரண்டு போட்டிகளிலுமே பெரிய அணிகளான தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளை வீழ்த்தியது. நியூசிலாந்துக்கு எதிரான நேற்றைய போட்டி மழையால் ரத்தானதால் ஒரு புள்ளியை பெற்று 5 புள்ளிகளை பெற்றுள்ளது. 

உலக கோப்பை தொடரில் தங்களது அரையிறுதி வாய்ப்பை தக்கவைக்க வெற்றி பெற்றே தீர வேண்டிய நெருக்கடியான போட்டியில் இந்தியாவை எதிர்கொள்கிறது பாகிஸ்தான். இந்திய அணியோ பாகிஸ்தானுக்கு எதிரான உலக கோப்பை ரெக்கார்டை தக்கவைக்கும் முனைப்பில் உள்ளது. 

இந்நிலையில், இந்தியா - பாகிஸ்தான் போட்டி குறித்து பேசிய பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் வக்கார் யூனிஸ், ஷதாப் கான் பாகிஸ்தான் அணிக்கு முக்கியமான வீரர். இந்தியாவுக்கு எதிரான போட்டியில் அவரை மீண்டும் அணியில் எடுக்க வேண்டும். 5 பவுலர்களுடன் பாகிஸ்தான் அணி ஆட வேண்டும். 4 ஃபாஸ்ட் பவுலர்கள் மற்றும் ஒரு ஸ்பின்னர்(ஷதாப் கான்) என மொத்தம் 5 பவுலர்களுடன் ஆட வேண்டும். அதனால் ஷோயப் மாலிக்கை நீக்கிவிட்டு ஷதாப் கானை சேர்க்க வேண்டும் என வக்கார் யூனிஸ் ஆலோசனை தெரிவித்துள்ளார். 

பாகிஸ்தான் அணியின் முதல் போட்டியில் இமாத் வாசிம் ஆடினார். அவர் சரியாக ஆடாததால், அதற்கடுத்த போட்டிகளில் சீனியர் வீரர் மாலிக் எடுக்கப்பட்டார். ஆனால் மாலிக் ஒரு போட்டியில் கூட சரியாக ஆடவில்லை. ஷோயப் மாலிக் சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன். எனினும் உலக கோப்பை தொடரில் சரியாக ஆடவில்லை. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் கூட ரன்னே எடுக்காமல் டக் அவுட்டானார். அவர் ஓரளவிற்கு ஆடியிருந்தால் கூட பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு வாய்ப்பிருந்தது. மாலிக் ஃபார்மில் இல்லாமல் திணறிவரும் நிலையில், அவரை நீக்கிவிட்டு ஸ்பின்னர் ஷதாப் கானை சேர்க்க வேண்டும் என வக்கார் யூனிஸ் தெரிவித்துள்ளார். 
 

click me!