#ENGvsIND 4வது டெஸ்ட்டில் எந்த அணி வெல்லும்..? விவிஎஸ் லக்‌ஷ்மண் ஆருடம்

By karthikeyan VFirst Published Sep 4, 2021, 6:43 PM IST
Highlights

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 4வது டெஸ்ட்டில் எந்த அணி வெல்லும் என்று இந்திய முன்னாள் ஜாம்பவான் விவிஎஸ் லக்‌ஷ்மண் ஆருடம் தெரிவித்துள்ளார்.
 

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 4வது டெஸ்ட்டில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியில் விராட் கோலியும் ஷர்துல் தாகூரும் மட்டுமே அரைசதம் அடித்தனர். மற்ற அனைவருமே பேட்டிங்கில் சொதப்பினர். விராட் கோலி 50 ரன்களும், ஷர்துல் தாகூரும் 57 ரன்களும் அடித்தனர். மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் வெறும் 191 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 290 ரன்களை குவித்தது. இந்திய அணி முதல் இன்னிங்ஸ் முடிவில் 99 ரன்கள் பின் தங்கியது.

99 ரன்கள் பின் தங்கிய நிலையில், 2வது இன்னிங்ஸை, போட்டியின் 2ம் நாளான நேற்றைய ஆட்டத்தின் 3வது செசனில் தொடங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித்தும் ராகுலும் சிறப்பாக ஆடி விக்கெட் இழக்காமல் 2ம் நாள் ஆட்டத்தை முடித்தனர். 2ம் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 43 ரன்கள் அடித்திருந்தது.

3ம் நாளான இன்றைய ஆட்டத்தை ரோஹித்தும் ராகுலும் தொடர்ந்தனர். இன்றும் இருவரும் சிறப்பாக ஆடினர். சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த ராகுல் 46 ரன்களில் ஆண்டர்சனின் பந்தில் ஆட்டமிழந்து அரைசதத்தை தவறவிட்டு வெளியேறினார். நன்றாக செட்டில் ஆகியுள்ள ரோஹித்துடன் புஜாரா ஜோடி சேர்ந்து ஆடிவருகிறார். ரோஹித் சர்மா அரைசதம் கடந்துவிட்டார். இங்கிலாந்தை விட முன்னிலை பெற்றுவிட்டது இந்திய அணி.

இந்நிலையில், இந்த போட்டி குறித்து ஆருடம் தெரிவித்துள்ள விவிஎஸ் லக்‌ஷ்மண், இந்திய பேட்ஸ்மேன்கள் 2வது இன்னிங்ஸில் சிறப்பான பங்களிப்பை வழங்கும் முனைப்பில் உள்ளனர். இந்திய வீரர்கள் அனைவரும் உலகத்தரம் வாய்ந்த வீரர்கள். எனவே நல்ல கம்பேக் கொடுப்பார்கள். இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெறும் என நினைக்கிறேன். இந்திய அணி 2வது இன்னிங்ஸில் நன்றாக பேட்டிங் ஆடினால் கண்டிப்பாக ஜெயித்துவிடும் என்று லக்‌ஷ்மண் கூறியுள்ளார்.

லக்‌ஷ்மண் கூறியதை போல இந்திய வீரர்கள் 2வது இன்னிங்ஸில் நன்றாக பேட்டிங் ஆடிவருகின்றனர். 
 

click me!