#ENGvsIND 2வது இன்னிங்ஸில் இந்திய அணிக்கு நல்ல தொடக்கம்..! ரோஹித் செட்டில்; அரைசதத்தை தவறவிட்ட ராகுல்

Published : Sep 04, 2021, 05:45 PM IST
#ENGvsIND 2வது இன்னிங்ஸில் இந்திய அணிக்கு நல்ல தொடக்கம்..! ரோஹித் செட்டில்; அரைசதத்தை தவறவிட்ட ராகுல்

சுருக்கம்

இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட்டின் 2வது இன்னிங்ஸில் இந்திய அணிக்கு ரோஹித்தும் ராகுலும் இணைந்து நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர்.  

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 4வது டெஸ்ட்டில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியில் விராட் கோலியும் ஷர்துல் தாகூரும் மட்டுமே அரைசதம் அடித்தனர். மற்ற அனைவருமே பேட்டிங்கில் சொதப்பினர். விராட் கோலி 50 ரன்களும், ஷர்துல் தாகூரும் 57 ரன்களும் அடித்தனர். மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் வெறும் 191 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 290 ரன்களை குவித்தது. இந்திய அணி முதல் இன்னிங்ஸ் முடிவில் 99 ரன்கள் பின் தங்கியது.

99 ரன்கள் பின் தங்கிய நிலையில், 2வது இன்னிங்ஸை, போட்டியின் 2ம் நாளான நேற்றைய ஆட்டத்தின் 3வது செசனில் தொடங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித்தும் ராகுலும் சிறப்பாக ஆடி விக்கெட் இழக்காமல் 2ம் நாள் ஆட்டத்தை முடித்தனர். 2ம் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 43 ரன்கள் அடித்திருந்தது.

3ம் நாளான இன்றைய ஆட்டத்தை ரோஹித்தும் ராகுலும் தொடர்ந்தனர். இன்றும் இருவரும் சிறப்பாக ஆடினர். சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த ராகுல் 46 ரன்களில் ஆண்டர்சனின் பந்தில் ஆட்டமிழந்து அரைசதத்தை தவறவிட்டு வெளியேறினார். நன்றாக செட்டில் ஆகியிருந்த ரோஹித்துடன் புஜாரா ஜோடி சேர்ந்தார். ரோஹித் சர்மா 47 ரன்களுடனும் புஜாரா 14 ரன்களுடனும் களத்தில் இருந்த நிலையில், உணவு இடைவேளை விடப்பட்டது.

3ம் நாளான இன்றைய ஆட்டத்தின் முதல் செசன் முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 108 ரன்கள் அடித்து, 9 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
 

PREV
click me!

Recommended Stories

Galle Test: 462 ரன்கள் குவித்த இந்தியா... சரசரவென சரிந்த இலங்கை டாப் ஆர்டர்..!
Yashasvi Jaiswal: வைபவ் வந்ததும் ஜெய்ஸ்வாலை கழட்டிவிடும் RR..? MI உடன் மெகா டிரேட் டீல்..?