உலக கோப்பை இறுதி போட்டியில் இந்த 2 அணிகள் தான் மோதும்.. லட்சுமணன் அதிரடி

By karthikeyan VFirst Published Jun 29, 2019, 12:08 PM IST
Highlights

உலக கோப்பை இறுதி போட்டியில் எந்தெந்த அணிகள் மோதும் என முன்னாள் ஜாம்பவான் விவிஎஸ் லட்சுமணன் ஆருடம் தெரிவித்துள்ளார். 

உலக கோப்பை தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்கு முன்னேறிவிட்டது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறுவது உறுதியாகிவிட்டது. 

ஆனால் உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள முதன்மையான அணியாக பார்க்கப்பட்ட இங்கிலாந்து அணியின் நிலை பரிதாபமாக உள்ளது. இதுவரை இங்கிலாந்து அணி ஆடிய 7 போட்டிகளில் 4 வெற்றிகளை பெற்று 8 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது. 

எனவே இங்கிலாந்து அணி எஞ்சிய 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஆனால் அது இங்கிலாந்து அணிக்கு அவ்வளவு எளிதல்ல. ஏனெனில் அடுத்த 2 போட்டிகளில் வலுவான அணிகளான இந்தியா மற்றும் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது இங்கிலாந்து. இங்கிலாந்து அணி, இந்த 2 போட்டிகளில் ஒன்றில் தோற்று, அதேநேரத்தில் பாகிஸ்தான் அல்லது வங்கதேசம் ஆகிய இரண்டு அணிகளில் எந்த அணி அடுத்த 2 போட்டிகளிலும் வெற்றி பெறுகிறதோ அந்த அணி அரையிறுதிக்கு முன்னேறிவிடும்.

எனவே உலக கோப்பை விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்த உலக கோப்பை தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளின் ஆதிக்கம்தான் அதிகம் உள்ளது. 

உலக கோப்பை இறுதி போட்டியில் கிரிக்கெட்டின் மெக்கா என்று அழைக்கப்படும் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் எந்தெந்த அணிகள் மோதும்? எந்த அணி கோப்பையை வெல்லும்? என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர். 

இந்நிலையில், இந்த உலக கோப்பை குறித்து பேசியுள்ள முன்னாள் ஜாம்பவான் விவிஎஸ் லட்சுமணன், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகள் தான் இறுதி போட்டியில் மோதும் என லட்சுமணன் ஆருடம் தெரிவித்துள்ளார். 

நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலிய அணி, உலக கோப்பைக்கு முன்புவரை பெரியளவில் ஆடவில்லை என்றாலும் உலக கோப்பை தொடரில் அபாரமாக ஆடிவருகிறது. இதுவரை 7 போட்டிகளில் ஆடி 6 வெற்றிகளுடன் 12 புள்ளிகளை பெற்று அரையிறுதிக்கு முன்னேறிவிட்டது. அந்த அணி தோற்ற ஒரே போட்டி இந்தியாவுக்கு எதிரானதுதான். இந்தியாவிடம் மட்டுமே தோல்வியடைந்தது. இன்றைய போட்டியில் ஆஸ்திரேலிய அணி, நியூசிலாந்தை எதிர்கொண்டு ஆடுகிறது. இது விறுவிறுப்பான போட்டியாக அமையும். 
 

click me!