புதிய ஜெர்சிக்கு பிசிசிஐ ஆரஞ்சு நிறத்தை தேர்வு செய்தது ஏன்..? வெளிவந்த அதிரடி தகவல்

By karthikeyan VFirst Published Jun 29, 2019, 10:47 AM IST
Highlights

ஒரே நிறத்தில் ஜெர்சி அணியும் அணிகளுக்கு இடையேயான போட்டியில், போட்டியை நடத்தும் அணி அவர்களின் வழக்கமான ஜெர்சியையும் மற்றொரு அணி ஜெர்சியை மாற்றிக்கொள்ளலாம் என்றும் ஐசிசி ஆப்சன் வழங்கியது. 
 

உலக கோப்பை தொடரின் முக்கியமான போட்டியில் நாளை இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. 

அரையிறுதி வாய்ப்பை தக்கவைக்க இந்தியாவுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் இந்த போட்டி கண்டிப்பாக மிகவும் விறுவிறுப்பாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள இரு அணிகளாக பார்க்கப்படும் இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான போட்டியை ரசிகர்கள் பேராவலுடன் எதிர்நோக்கி காத்துள்ளனர். 

இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய இரு அணிகளுமே நீல நிற ஜெர்சி அணிந்து ஆடுவதால், போட்டியை நடத்தும் அணியான இங்கிலாந்து அதன் ஜெர்சியை அணிந்து ஆடும். இந்திய அணி ஜெர்சியை மாற்றிக்கொள்ளலாம். ஒரே நிறத்தில் ஜெர்சி அணியும் அணிகளுக்கு இடையேயான போட்டியில், போட்டியை நடத்தும் அணி அவர்களின் வழக்கமான ஜெர்சியையும் மற்றொரு அணி ஜெர்சியை மாற்றிக்கொள்ளலாம் என்றும் ஐசிசி ஆப்சன் வழங்கியது. 

அதன்படி ஆஃப்கானிஸ்தான், இலங்கை, தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் அதற்கேற்ப ஜெர்சியை மாற்றி ஆடின. அந்தவகையில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணி புதிய ஜெர்சியில் ஆட உள்ளது. ஆரஞ்சு-நீல நிற கலவையிலான புதிய ஜெர்சி நேற்று வெளியிடப்பட்டது. 

இதில், ஆரஞ்சு நிறத்தை பிசிசிஐ தேர்வு செய்ததற்கான காரணம் தெரியவந்துள்ளது. இதுகுறித்து பேசியுள்ள ஐசிசி அதிகாரி ஒருவர், புதிய ஜெர்சிக்கு பல நிறங்கள் ஆப்சன்களாக கொடுக்கப்பட்டன. ஜெர்சி நிறத்தையும் மாற்ற வேண்டும். அதேநேரத்தில் அது இந்திய ரசிகர்களுக்கு அந்நியமாகவும் தெரியக்கூடாது. எனவே ஏற்கனவே இந்திய அணியின் டி20 ஜெர்சியில் ஆரஞ்சு நிறம் இருந்ததால், அதை தேர்வு செய்தால் ரசிகர்களும் அந்நியமாக இருக்காது என்பதால் பிசிசிஐ அதை தேர்வு செய்தது. அதற்கேற்றபடி இந்திய அணியின் புதிய ஜெர்சி வடிவமைக்கப்பட்டுள்ளது என்று அந்த ஐசிசி அதிகாரி தெரிவித்ததாக பிடிஐ, ஏ.என்.ஐ செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. 
 

click me!