அடுத்த சில வருடங்களில் சர்வதேச கிரிக்கெட்டில் மிகப்பெரிய வீரராக இவர் ஜொலிப்பார்..! இந்திய வீரருக்கு லக்‌ஷ்மண்

By karthikeyan VFirst Published May 20, 2021, 7:17 PM IST
Highlights

அடுத்த சில வருடங்களில் முகமது சிராஜ் சர்வதேச கிரிக்கெட்டில் மிகப்பெரிய வீரராக ஜொலிப்பார் என்று விவிஎஸ் லக்‌ஷ்மண் புகழாரம் சூட்டியுள்ளார்.
 

இந்திய அணியின் ஃபாஸ்ட் பவுலிங் தரம் கடந்த சில ஆண்டுகளில் பன்மடங்கு உயர்ந்து பலவிதமான ஃபாஸ்ட் பவுலர்களுடன் சர்வதேச கிரிக்கெட்டில் மிகச்சிறந்த பவுலிங் யூனிட்டை கொண்ட அணியாக இந்திய அணி திகழ்கிறது.

பும்ரா, புவனேஷ்வர் குமார், இஷாந்த் சர்மா, ஷமி, உமேஷ் யாதவ், முகமது சிராஜ், நவ்தீப் சைனி, நடராஜன் என தரமான ஃபாஸ்ட் பவுலிங் யூனிட்டை பெற்று சர்வதேச அணிகளை மிரட்டுகிறது இந்திய அணி.

கடந்த 6 மாதங்களில் இந்திய அணியின் டெஸ்ட் ஃபாஸ்ட் பவுலிங் யூனிட்டின் முதன்மை வீரர்களில் ஒருவராக உருவெடுத்த முகமது சிராஜ், அடுத்த சில ஆண்டுகளில் மிகப்பெரிய வீரராக ஜொலிப்பார் என லக்‌ஷ்மண் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆஸி., சுற்றுப்பயணத்தில் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி அருமையாக பந்துவீசி ஆஸி., மண்ணில் அந்நாட்டு வீரர்களை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய சிராஜ், இந்திய அணியில் தனக்கான இடத்தை பிடித்துள்ளார் சிராஜ்.

இந்நிலையில், சிராஜ் குறித்து பேசியுள்ள லக்‌ஷ்மண், அடுத்த சில ஆண்டுகள் இதேமாதிரியான கடின உழைப்பை போட்டால், சர்வதேச கிரிக்கெட்டில் மிகப்பெரிய வீரராக சிராஜ் திகழ்வார். அதற்கான அனைத்து தகுதியும் திறமையும் சிராஜுக்கு இருக்கிறது என்று லக்‌ஷ்மண் புகழாரம் சூட்டியுள்ளார்.

நல்ல உயரமான ஃபாஸ்ட் பவுலரான சிராஜ், நல்ல வேகத்திலும், 2 பக்கமும் ஸிவிங் செய்து வீசக்கூடிய திறனும் பெற்ற பவுலர் ஆவார்.
 

click me!