#IPL2021 ஐபிஎல் 14வது சீசனில் அந்த அணி தான் கோப்பையை வெல்லும்..! அடித்துச்சொல்லும் சேவாக்

Published : Sep 19, 2021, 02:41 PM IST
#IPL2021 ஐபிஎல் 14வது சீசனில் அந்த அணி தான் கோப்பையை வெல்லும்..! அடித்துச்சொல்லும் சேவாக்

சுருக்கம்

ஐபிஎல் 14வது சீசனில் எந்த அணி டைட்டிலை வெல்லும் என்று வீரேந்திர சேவாக் கருத்து கூறியுள்ளார்.  

ஐபிஎல் 14வது சீசனில் 29 போட்டிகள் நடந்த நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட எஞ்சிய போட்டிகள் இன்று முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கின்றன.

அதற்காக அமீரகம் சென்றுள்ள அனைத்து அணிகளும் கோப்பையை வெல்லும் முனைப்பில் தீவிர தயாரிப்பில் ஈடுபட்டுவருகின்றன. ஏற்கனவே 5 முறை கோப்பையை வென்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி 6வது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பிலும், 3 முறை டைட்டிலை வென்றுள்ள சிஎஸ்கே 4வது முறையாக வெல்லும் முனைப்பிலும் ஆடுகின்றன.

ஆர்சிபி, பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடள்ஸ் ஆகிய அணிகள் வழக்கம்போலவே முதல் முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் களமிறங்குகின்றன. கடந்த சீசனில் ஃபைனல் வரை சென்று கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்த டெல்லி கேபிடள்ஸ் அணி, இந்த சீசனில் ரிஷப் பண்ட்டின் தலைமையில் ஆடுகிறது.

அனைத்து அணிகளுமே கோப்பையை வெல்லும் முனைப்பில் தான் களமிறங்குகின்றன. ஆனாலும் இந்த முறை எந்த அணி கோப்பையை வெல்வதற்கான வாய்ப்புள்ளது என்று முன்னாள் வீரர்கள் பலரும் தங்களது கருத்துகளை தெரிவித்துவருகின்றனர்.

அந்தவகையில், ஐபிஎல் 14வது சீசன் டைட்டில் வின்னர் குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் அதிரடி மன்னன் வீரேந்திர சேவாக், ஐபிஎல் 14வது சீசனின் 2வது பாதி அமீரகத்திற்கு மாற்றப்பட்டிருக்கிறது. எனவே கடந்த சீசனில் ஃபைனலில் ஆடிய மும்பை மற்றும் டெல்லி அணிகளுக்குத்தான் வெற்றி வாய்ப்பிருக்கிறது. அதிலும், 5 முறை சாம்பியனும் நடப்பு சாம்பியனுமான மும்பை இந்தியன்ஸுக்குத்தான் அதிக வாய்ப்பு இருக்கிறது. இந்தியாவில் நடந்த ஐபிஎல் 14வது சீசனின் முதல் பாதியில் சிஎஸ்கேவின் சராசரி ஸ்கோர் 201 ரன்கள் ஆகும். ஆனால் அமீரக ஆடுகளங்களில் ஜொலிக்கும் அளவிற்கான பேட்டிங் வலிமை சிஎஸ்ஏவிடம் இல்லை. எனவே எந்த அணி வெல்லும் என்று ஒரு அணியை தேர்வு செய்ய சொன்னால், நான் மும்பை இந்தியன்ஸ் அணி தான் என்பேன் என்றார் சேவாக்.
 

PREV
click me!

Recommended Stories

IPL 2022 Playoff Scenarios: பிளேஆஃப் ரேஸில் யாருக்கு இடம்? சிஎஸ்கே-க்கு வாய்ப்பு உள்ளதா? முழு விவரம்
ICC ODI Rank: நம்பர் 1 இடத்தில் ‘கெத்து’ காட்டும் இந்தியா.. ஆஸ்திரேலியா எந்த இடம்?