டி20 உலக கோப்பையில் எந்த 2 அணிகள் ஃபைனலில் மோதும், அதில் எந்த அணி கோப்பையை வெல்லும் என்று வீரேந்திர சேவாக் ஆருடம் தெரிவித்துள்ளார்.
டி20 உலக கோப்பை தொடரில் கடந்த 16ம் தேதி தொடங்கிய தகுதிச்சுற்று போட்டிகள் இன்றுடன் முடிவடைகிறது. க்ரூப் ஏ-விலிருந்து இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறியுள்ளன. க்ரூப் பி-யிலிருந்து அயர்லாந்து அணி சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறிவிட்ட நிலையில், 2வது அணியை தீர்மானிக்கும் போட்டி ஸ்காட்லாந்து - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையே நடந்துவருகிறது. நாளை முதல் சூப்பர் 12 சுற்று போட்டிகள் தொடங்குகின்றன.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளில் ஒன்றுதான் கோப்பையை வெல்லும் என பலரும் எதிர்பார்க்கின்றனர். டி20 உலக கோப்பை ஆஸ்திரேலியாவில் நடப்பது அந்த அணிக்கு கூடுதல் பலம்.
undefined
ரோஹித், ராகுல், கோலி, சூர்யகுமார், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக் என இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் மிகவலுவாக உள்ளது. அஷ்வின், அக்ஸர் படேல், சாஹல் என தரமான ஸ்பின்னர்களையும், புவனேஷ்வர் குமார், ஷமி, ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங் ஆகிய சிறந்த ஃபாஸ்ட்பவுலர்களையும் பெற்றுள்ளது. பும்ரா ஆடாததால் டெத் ஓவர் கவலை இருந்துவந்த நிலையில், ஆஸி.,க்கு எதிரான பயிற்சி போட்டியில் கடைசி ஓவரில் துல்லியமான யார்க்கர்களை வீசி 3 விக்கெட் வீழ்த்தி 11 ரன்களை அடிக்கவிடாமல் 4 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து இந்திய அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்து நம்பிக்கை கொடுத்தார் ஷமி. எனவே இந்திய அணி மிக வலுவாக உள்ளது.
இதையும் படிங்க - பந்து தலையில் பட்டு மைதானத்திலேயே சுருண்டு விழுந்த அதிரடி வீரர்..! பாகிஸ்தான் அணிக்கு மரண அடி
இங்கிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா அணிகளும் வலுவாக திகழ்கின்றன. பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியின் டாப் ஆர்டர் பேட்டிங் (பாபர் அசாம் - முகமது ரிஸ்வான்), ஃபாஸ்ட் பவுலிங் யூனிட் ஆகியவை வலுவாக உள்ளது. மிடில் ஆர்டர் பேட்டிங் தான் பலவீனமாக உள்ளது. ஆனால் டாப் ஆர்டர் டபுள் வலுவாக இருப்பதால், கொஞ்சம் மேனேஜ் செய்து ஆடினால் பாகிஸ்தான் அணி மிகவலுவாக இருக்கும்.
ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியும் பேட்டிங், பவுலிங் என அனைத்துவகையிலும் மிரட்டலான அணியாக திகழ்கிறது. பட்லர், அலெக்ஸ் ஹேல்ஸ், டேவிட் மலான், மொயின் அலி ஆகியோர் செம ஃபார்மில் அபாரமாக ஆடிவருகின்றனர். பவுலிங்கிலும் ரீஸ் டாப்ளி, மார்க் உட், டேவிட் வில்லி, சாம் கரன், பென் ஸ்டோக்ஸ், அடில் ரஷீத், கிறிஸ் ஜோர்டான் என சிறந்த பவுலிங் யூனிட்டை பெற்றிருக்கிறது. டி20 உலக கோப்பைக்கு முன் நடந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 தொடரை வென்று மிகுந்த உற்சாகத்துடனும் நம்பிக்கையுடனும் உள்ளனர்.
டெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்க அணியில் குயிண்டன் டி காக், டேவிட் மில்லர் ஆகிய அதிரடி வீரர்கள் மிரட்டலான ஃபார்மில் உள்ளனர். ரபாடா, நோர்க்யா ஆகியோருடன் மார்கோ யான்செனும் பவுலிங்கிற்கு வலுசேர்ப்பார். ஸ்பின் பவுலிங்கில் ஷம்ஸி மற்றும் கேஷவ் மஹராஜ் வலுசேர்க்கின்றனர். எனவே டி20 உலக கோப்பையை வெல்வதற்கான போட்டி அணிகளுக்கு இடையே கடுமையாக இருக்கும்.
இந்நிலையில், டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு எந்த 4 அணிகள் முன்னேறும், எந்தெந்த அணிகள் ஃபைனலில் மோதும், எந்த அணி கோப்பையை வெல்லும் என்பது குறித்தெல்லாம் முன்னாள் வீரர்கள் கருத்து கூறிவருகின்றனர்.
இதையும் படிங்க - ரிஷப் பண்ட்டின் தலையெழுத்து ஹர்திக் பாண்டியாவின் கையில்..! பெரும் குழப்பத்துக்கு கவாஸ்கர் சொல்லும் தீர்வு
அந்தவகையில் இதுகுறித்த தனது கருத்தை கூறிய வீரேந்திர சேவாக், இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் தான் ஃபைனலில் மோதும் என்று தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து பேசிய சேவாக், ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது மிகக்கடினம். இந்திய அணி ஆஸ்திரேலியாவில் ஆடிய நல்ல அனுபவம் கொண்ட மற்றும் பேலன்ஸான அணி என்று சேவாக் கூறியுள்ளார்.