அது உண்மையா இருந்தா இது எப்படி சாத்தியம்..? கேப்டன் கோலியின் லாஜிக்கான கேள்வி

By karthikeyan VFirst Published Jul 31, 2019, 10:56 AM IST
Highlights

ரோஹித்துடனான மோதல் குறித்து கேப்டன் கோலியிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு, லாஜிக்கான கருத்து ஒன்றை முன்வைத்து பதிலளித்தார் கோலி. 

உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணியாக பார்க்கப்பட்ட இந்திய அணி, நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதி போட்டியில் தோற்று வெளியேறியது. இந்திய அணியின் சிக்கலாக இருந்துவந்த 4ம் வரிசை பேட்ஸ்மேனை 2 ஆண்டுகளாக தேடியும் இந்திய அணி நிர்வாகத்தால் சரியான வீரரை கண்டறிய முடியவில்லை. 

அதன் எதிரொலியாக உலக கோப்பையில் தோற்று இந்திய ஏமாற்றத்துடன் நாடு திரும்பியது. உலக கோப்பைக்கு பின்னர் பல அதிர்ச்சிகர தகவல்கள் வெளிவந்தன. இந்திய அணி, ரோஹித் மற்றும் கோலி தலைமையில் இரண்டு பிரிவுகளாக பிரிந்து கிடப்பதாகவும், துணை கேப்டன் என்ற வகையில் ரோஹித்தின் ஆலோசனையை கேட்காமலேயே கேப்டன் கோலி தன்னிச்சையாக செயல்பட்டதாகவும் தகவல் வெளிவந்தது. மேலும் அணி தேர்விலும் அது எதிரொலித்ததாகவும் ஒரு தகவல் வந்தது.

மேலும் உலக கோப்பை சமயத்தில் 15 நாட்கள் மட்டுமே குடும்பத்தினரை தங்களுடன் தங்கவைத்துக்கொள்ள பிசிசிஐ அனுமதித்திருந்தது. ஆனால் கேப்டன் கோலியின் அனுமதியின்றி ரோஹித் சர்மா தொடர் முழுவதும் மனைவி ரித்திகாவை தங்கவைத்திருந்ததாகவும் இதுதொடர்பாக ரோஹித்திடம் கோலி கேட்கப்போய்த்தான் பிரச்னை வந்ததாகவும் ஒரு தகவல் வெளிவந்தது. ஆனால் அதற்கு முன்பிலிருந்தே ரோஹித் - கோலி பனிப்போர் குறித்து பேசப்பட்டுவருகிறது. எனவே இதுதான் இருவரின் மோதலுக்கு காரணம் என்று கூறமுடியாது.

வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்திற்கு கிளம்புவதற்கு முன் செய்தியாளர்களை சந்தித்த கேப்டன் கோலியிடம், ரோஹித்துடனான மோதல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த கோலி, ரோஹித்துடன் எந்த மோதலும் கிடையாது என திட்டவட்டமாக மறுத்தார். 

எனக்கும் ரோஹித்துக்கும் இடையே மோதல் என்று பேசப்படுவது குறித்து நானும் நிறைய கேள்விப்பட்டேன். ஆனால் ஓய்வறை சூழல் சரியாக இல்லையென்றால் வெற்றிகரமான அணியாக திகழ முடியாது. எனக்கும் ரோஹித்துக்கும் இடையே உண்மையாகவே மோதல் இருந்தால் எங்களால் எப்படி நன்றாக ஆட முடியும்? இதெல்லாம் கேலிக்குரிய செய்தி. நாங்கள் ஒருவரை ஒருவர் கண்டும் காணாதது போல் இருக்கிறோம் என்ற செய்திகள் எல்லாம் அவமரியாதை செய்வதாக உள்ளது. நாங்கள் எப்படி இருக்கிறோம் என்று எங்கள் ஓய்வறைக்கு வந்து பாருங்கள். எங்கள் உறவை வீடியோ எடுத்தெல்லாம் காட்டமுடியாது என்று தடாலடியாக தெரிவித்தார். 

click me!