ரோஹித் சொன்னதைத்தான் நானும் சொல்றேன்.. நாங்க அதை பிளான் பண்ணிலாம் பண்றது இல்ல!! அதுவா நடக்குது.. கேப்டன் கோலி அதிரடி

By karthikeyan VFirst Published Jul 9, 2019, 11:10 AM IST
Highlights

இந்த உலக கோப்பையில் என்னுடைய ரோல் வித்தியாசமானது. அணிக்கு எந்தவிதமான பங்களிப்பை செய்ய வேண்டுமோ அதை மட்டுமே செய்துவருகிறேன். ரோஹித் தொடர்ச்சியாக சிறப்பாக ஆடி சதங்களை குவித்து வருவதால், இன்னிங்ஸின் பிற்பாதியில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களை நிலைப்படுத்தி ஆடவைக்க வேண்டிய ரோல் என்னுடையது. 

உலக கோப்பை தொடரில் இந்திய அணி சிறப்பாக ஆடி புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. நாளை நடக்கவிருக்கும் முதல் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொண்டு ஆடுகிறது இந்திய அணி. 

இந்திய அணியின் மிகப்பெரிய பலமே டாப் ஆர்டர் பேட்டிங்கும், பவுலிங்கும் தான். அதற்கேற்ப டாப் ஆர்டரும் பவுலர்களும் சிறப்பாகவே செயல்பட்டுள்ளனர். இந்த உலக கோப்பையில் கோலியின் பங்களிப்பு பெரிதாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரோஹித் சர்மா தான் தெறிக்கவிட்டுவருகிறார். 

தனது பார்ட்னரான தவான் காயத்தால் தொடரிலிருந்து விலகிய பின்னரும் கூட, அந்த கூடுதல் பொறுப்பையும் தோள்களில் சுமந்து அபாரமாக ஆடிவருகிறார் ரோஹித். லீக் சுற்றில் 8 இன்னிங்ஸ்களில் ஆடி 5 சதங்களை அடித்த ரோஹித் சர்மா, ஒரு உலக கோப்பை தொடரில் அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார். 

ரோஹித் சர்மா 8 இன்னிங்ஸ்களில் 647 ரன்களை குவித்துள்ளார். ஒரு உலக கோப்பை தொடரில் அதிக ரன்களை குவித்த வீரர்களின் பட்டியலில் 2003ல் 673 ரன்களை குவித்த சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் உள்ளார். 2007 உலக கோப்பையில் 659 ரன்களை குவித்த ஹைடன் இரண்டாமிடத்தில் உள்ளார். ரோஹித் சர்மா 647 ரன்களுடன் மூன்றாமிடத்தில் உள்ளார். 

இன்னும் 13 ரன்கள் அடித்தால் ஹைடனின் சாதனையையும் 27 ரன்கள் அடித்தால் சச்சின் டெண்டுல்கரின் சாதனையையும் ரோஹித் சர்மா முறியடித்துவிடுவார். 

ரோஹித் சர்மா சதங்களை குவித்துவரும் நிலையில், வழக்கமாக சதங்களை குவிக்கும் விராட் கோலியோ தொடர்ச்சியாக 5 அரைசதங்கள் அடித்தும் கூட அதில் ஒன்றைக்கூட சதமாக மாற்றவில்லை. வழக்கமாக அரைசதங்களை சதங்களாக மாற்றுவதில் வல்லவரான விராட் கோலி, உலக கோப்பையில் அதை செய்யவில்லை. ரோஹித் சர்மா 5 சதங்கள் விளாசியுள்ள நிலையில், விராட் கோலியோ 5 அரைசதங்கள் தான் அடித்துள்ளார். 

இன்று இந்தியா - நியூசிலாந்து இடையேயான முதல் அரையிறுதி போட்டி நடைபெறவுள்ள நிலையில், நேற்று செய்தியாளர்களிடம் பேசிய கேப்டன் விராட் கோலியிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த விராட் கோலி, இந்த உலக கோப்பையில் என்னுடைய ரோல் வித்தியாசமானது. அணிக்கு எந்தவிதமான பங்களிப்பை செய்ய வேண்டுமோ அதை மட்டுமே செய்துவருகிறேன். ரோஹித் தொடர்ச்சியாக சிறப்பாக ஆடி சதங்களை குவித்து வருவதால், இன்னிங்ஸின் பிற்பாதியில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களை நிலைப்படுத்தி ஆடவைக்க வேண்டிய ரோல் என்னுடையது. அந்த வகையில் ஒருமுனையில் நிலைத்து நின்று ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட் ஆகியோரை அவர்களது ஆட்டத்தை ஆடவிடுவது என்னுடைய ரோல். அதைத்தான் செய்துவருகிறேன். கடைசி ஓவர்களில் தேவைப்பட்டால் நான் அடித்து ஆடி ஸ்கோரை உயர்த்த வேண்டும்.

ஒருநாள் போட்டிகளில் நம்முடைய ரோல் வேறுபட்டு கொண்டே இருக்கும். அதைத்தான் செய்கிறோமே தவிர, யாருமே தனிப்பட்ட சாதனைகளை கருத்தில் கொள்வதில்லை. இதையே தான் ஏற்கனவே ரோஹித்தும் சொல்லியிருக்கிறார். அவரும் அணிக்கு தேவையானதை சிறப்பாக செய்யும் முனைப்புடன் ஆடுகிறார். அணிக்காக சிறப்பாக ஆடும்போது நமக்கும் சில சாதனைகள் வந்து சேர்ந்துவிடுமே தவிர, அதை திட்டமிட்டு செய்வதில்லை. ஒரு உலக கோப்பையில் 5 சதங்கள் அடித்து யாரையுமே பார்த்ததில்லை. அதை கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை.  எனவே அனைவரது பங்களிப்பும் அணிக்கானதுதான்.

அணியாக ஆடும் விளையாட்டுகளில் சூழலுக்கு ஏற்றவாறு நமது ரோலை சிறப்பாக செய்ய வேண்டும். அதை செய்வதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. அந்தவகையில் ரோஹித் இன்னும் 2 சதங்கள் அடிப்பார் என்று நம்புகிறேன். அப்படி அடித்தால் நாங்கள் கோப்பையை வெல்வோம் என்று சிரித்தபடியே தெரிவித்தார். மேலும் தற்போதைய சூழலில் ரோஹித் தான் தலைசிறந்த ஒருநாள் வீரர் என்று பெருமையுடன் தெரிவித்தார். 
 

click me!