உங்களால் மட்டும் எப்படி எல்லா மேட்ச்சுலயும் நல்லா ஆடமுடியுது..? என்ற கேள்விக்கு கோலி சொன்ன பதிலை பாருங்க

By karthikeyan VFirst Published Sep 19, 2019, 4:07 PM IST
Highlights

சர்வதேச கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக சிறப்பாக ஆட முடிவதற்கு என்ன காரணம் என்பதை விராட் கோலி தெரிவித்துள்ளார். 

சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்து கெத்தாக வலம்வரும் கோலி, போட்டிக்கு போட்டி ஏதாவது ஒரு சாதனையை முறியடித்து புதிய மைல்கல்லை எட்டிவருகிறார். அந்தவகையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியிலும் சாதனை படைக்க தவறவில்லை. 

தென்னாப்பிரிக்கா நிர்ணயித்த 150 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு வழக்கம்போலவே கோலி பொறுப்புடன் ஆடி வெற்றியை தேடிக்கொடுத்தார். 72 ரன்களை குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து இந்திய அணியை வெற்றி பெற செய்தார். 

இந்த போட்டியில் 72 ரன்கள் அடித்ததன் மூலம், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 2441 ரன்களை குவித்த கோலி, டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்களை அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார். ரோஹித் சர்மா தான் அதிக ரன்கள் குவித்த வீரராக இருந்தார். ஆனால் ரோஹித் நேற்று வெறும் 12 ரன்கள் மட்டுமே அடித்ததால், 2434 ரன்களுடன் இரண்டாமிடத்தில் உள்ளார். 

டி20 கிரிக்கெட்டிலும் விராட் கோலியின் சராசரி 50ஐ கடந்தது. டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் ஏற்கனவே 50க்கு அதிகமாக சராசரி வைத்திருக்கும் கோலி, டி20 கிரிக்கெட்டிலும் 50க்கு அதிகமான சராசரியை வைத்துள்ளார்.

விராட் கோலியின் ஸ்பெஷாலிட்டியே அவரது நிலைத்தன்மைதான். இரண்டு போட்டியில் அடிப்பது, அடுத்த 3 போட்டிகளில் சொதப்புவது என்பது மாதிரியான வீரர் கிடையாது கோலி. 10ல் ஒன்றோ இரண்டோ மேட்ச் தான் சரியாக ஆடமாட்டார். மற்ற 8 போட்டிகளிலும் சிறப்பாக ஆடி ரன்களை குவிப்பதோடு அணியின் வெற்றிக்கும் காரணமாக திகழ்வார்.

இவ்வாறு அவரது ஆட்டம் அனைவரையுமே வியப்பில் தான் ஆழ்த்துகிறது. இந்நிலையில், உங்களால் எப்படி தொடர்ச்சியாக இப்படி சிறப்பாக ஆடமுடிகிறது என்ற கேள்விக்கு பதிலளித்த கோலி, என் டீஷர்ட்டின் முன்பகுதியில் ஒரு சின்னம் இருக்கிறது. என் நாட்டுக்காக நான் ஆடுகிறேன் என்ற பெருமையை எனக்கு அந்த சின்னம் அளிக்கிறது. அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வேன் என்று விராட் கோலி தெரிவித்தார். 
 

click me!